எதை ரசிப்பது?

ஏறி நிற்கும் நெற்றியையா
வழுக்கி விழும் மயிறையா?
விழிகாக்கும் இமைகளையா?
எனைதாக்கும் விழிகளையா?
காற்றாய் எனை மாற்றும் உன் நாசி துகள்களையா?
“போடா”என்று எனை அழைக்கும் உன் பூவிதழ்களையா?
வரிசைதவறி நின்று எனை தவறச்செய்த பற்களையா?
விழுந்தாலும் சிரிக்கச்செய்யும் உன் கன்னக்குழிகளையா?
உனை நாடி வரச் செய்த உன் நாடியையா?
என் நாடி துடிக்கச் செய்யும் உன்னாசையா?
பூவிற்கு தேனூட்டும் குரல்வளையையா?
ஒரே மூச்சில் பெருமூச்சு விடச்செய்யும் இரு திமிரையா?
தேடுதல் வேட்டையின் ஆரம்ப இடையையா?
வளைவுகள் ஜாக்கிரதை?எச்சரிக்கை விடும் வளைவையா?
குழந்தை நடைபழகும் நடையையா?
மணலில் நடந்தாலும் தடம் பதிக்காத பாதத்தையா?

அல்லது மொத்தமாக உன்னையா?
எதை ரசிப்பது?

ஆனாலும் உண்மைஉன்னை பற்றி பிறருக்கு விளக்கம் அளிக்காதே,
எனென்றால்
உன் அன்பானவர்களுக்கு அது தேவை இல்லாதது
உன் எதிரிகளோ நம்ப மறுப்பார்கள்யார் வாழ்க்கையில் நீயும் ஒரு விருப்பாக இருக்கிறாயோ
அவர்களுக்கு உன் வாழ்வில் சிறப்பிடம் அளிக்காதே
ஏனென்றால்
உறவு சமநிலையிலேயே சிறப்படைகிறதுஅதிகாலையில் நமக்கு இரண்டு வழிமுறைகள் உண்டு
ஒன்று மீண்டும் தூக்கத்தை தொடர்ந்து கொண்டே கனவு காண்பது
மற்றொன்று, கனவை தேடி அடைவதுநம்மீது அக்கறை உள்ளவர்களை அழவைக்கிறோம்
நம்மீது அக்கறை இல்லாதவர்களுக்காக அழுகிறோம்
நம்மீது அக்கறை இல்லாதவர்கள் மீதே அதிக அக்கறை காட்டுகிறோம்
இது வியப்பேயானாலும் உண்மை
இதை உணர்ந்தால், நம்மில் (தேவையான)மாற்றம் விரைவில் நிகழும்மகிழ்ச்சியில் இருக்கும்போது உறுதிமொழி எடுக்காதே
சோகத்தில் இருக்கும்போது பதிலளிக்காதே
கோபத்தில் முடிவெடுக்காதே
இருமுறை யோசித்து, ஒரு முறையிலேயே சரியாய் செயல்படுநேரம் என்பது ஆறு போன்றது
தொட்ட நீரை மீண்டும் தொடமுடியாது
ஏனென்றால் கடந்தது நம் முன் மீண்டும் நடக்காதுநான் எப்பொழுதும் வேலை பழுவிலேயே இருக்கிறேன் என்று நீங்கள் சொன்னால்
உங்களால் ஓய்வாகவே இருக்க இயலாது

நாளை என்பது என்றும் இன்று வாராது

ஆதலால் ஒன்றே செய் நன்றே செய்
அதை இன்றே செய்

தமிழர்களே, தமிழர்களே!- கலைஞர்

தமிழர்களே, தமிழர்களே!

மார்கழி உச்சியில் மலர்ந்தது பொங்கல் என்றாரே!
பாவேந்தர் பாரதிதாசன் - அன்று
மூவேந்தர் பரம்பரை கொண்டாடிய
பொங்கலை என்றும்
தொடருகின்ற தமிழர் விழாவாகக் கொண்டாடுவோம்!
வான் முட்ட வண்ணக் கொடிகள் பறக்கட்டும்!
வாழ்த்துக்கள் முரசு கொட்டட்டும் வகை வகையாக!
தெருவெல்லாம் தோரணங்கள் -
திண்ணைகளில் கோலங்கள் -
தேன் கலந்த மழலை மொழியும்
ஊன் கலந்து உயிரோடு இணையும்
கோலமங்கைக்கு குளிர் விழியும்
காலமெல்லாம் வாழ்க தமிழ் என்று
சீலமிகு செம்மொழியைப் பாடட்டும்!
ஓலிமிடு கடல் போல் உலகெங்கும் பரவட்டும் தமிழர் புகழ்!

உன் வழியீர்பு விசையின்

உன் வழியீர்பு விசையின்
வரவேற்பு திசையிலுள்ள
ஒற்றை அறையில் காத்திறுக்கிறேன்,
நீ வரவில்லையென்றாலும்,
உன் பார்வையாவது அனுப்பிவை,
சேர்த்து வைக்கிறேன் என் பார்வையாக!!!!!!!!!!!