“ பரிசாக நீ போதும் எனக்கு”
பிரிவு என்னும் சொல்லுள்ள கவிதையை

உனக்கு வாசிக்களித்தேன், அன்று பிரிவு

என்னும் சொல்லடித்து அக்கவிதை தாளை

திருப்பியளித்தாய்.

அதே நீ, பிரிவளித்து சென்றிருக்கிறாய்,

மூன்று நாட்கள்தான் என்றாலும்,

உன்னோடு இருக்கும் போது தாராளமாய்

செலவழிந்த நொடிகள், இன்று கஞ்சத்தனமாய்

கழியவே மாட்டேன் என்கின்றன.

சிறிய இடைவேளைதான் என்றாலும்

பிரிவுகழிந்து வரும் போது இறுக்கமாய்

என்னை, அன்னை போல் அணைத்து கொள்வாய்......

எனும்போது, காத்திருப்பதில் தவறில்லை என்றுதான்

எண்ணத் தோன்றுகிறது.

முத்தங்கள், உணர்வூட்டங்கள், கனவு-இரவுகள்

என மட்டும் பரிசளித்த நீ, இன்று ஏக்கங்கள் எனக்களித்து

சென்றிருக்கிறாய், நீ அளிக்கும் எதுவும் பரிசுதான் என்று

இதை இப்போதைக்கு ஏற்றுக் கொள்கிறேன்.

இப்படிப்பட்ட பரிசுகளை தருவதானால், பரிசுகளை

நிறுத்திக் கொள்,

பரிசாக நீ போதும் எனக்கு

புதுக்கவிதையாய்!

என் எழுத்துகள் அழகாயிருக்கிறதா?என்றேன்
நீங்கள்எழுதுவதெல்லாம் அழகாய்த்தானே
இருக்கும் என்றாய். அதை மறுத்து  நான் சொன்னேன்
உன்னை பற்றி எழுதுவதால் அவை
அழகாய் தொனிக்கின்றனஎன்றேன்.
வெட்கத்துடன் ஏற்றுக்கொண்டாய் புதுக்கவிதையாய்!