ஏமாறுவதானால் இவளிடம் தான்

புவி சுழலும்

பகல் அகலும்,என் நிழலும்

என்னை விட்டு நகரும்

நான் தனிமை உணரும் பொழுதில்

உன் நினைவு என் நிழலாய்

என்னை அருகும்,

என் தொண்டை குழி உலரும்.

உன் பெயரை உளரும்,

தனிமையில் இருக்கும்

என்னை உன் நிழல் நெருங்கும

இதழில் புன்னகை பூ பூக்கும்,

இதழ் நெருங்கி பூ பறிக்கத்தான் வருகிறாய்

என்று காத்து என் இதழ் தாங்கி நிற்பேன்.

ஆனால், நீயோ புன்னகைக்கு புன்னகை போதும்

என்று ஏமாற்றி செல்வாய்.

மீண்டும் என் இதழ்கள் புன்னகை பூக்கும்,

ஏமாறுவதில் அப்படி என்ன மகிழ்ச்சி

என கிண்டல் செய்யும் என் இதழ்கள்,

நான் என் இதழ்களிடம் சொல்லடக்க சொன்னேன்,

எங்கே உன் இதழ்களுக்கு கேட்டு விடுமோ?

நீங்கள் இவளுக்காகவே படைக்கப்பட்டவர்கள்,

ஏமாறுவதானால் இவளிடம் தான்

ஏமாற வேண்டும்....என்று

ஏமாறுவதானால் இவளிடம் தான்

புவி சுழலும்

பகல் அகலும்,என் நிழலும்

என்னை விட்டு நகரும்

நான் தனிமை உணரும் பொழுதில்

உன் நினைவு என் நிழலாய்

என்னை அருகும்,

என் தொண்டை குழி உலரும்.

உன் பெயரை உளரும்,

தனிமையில் இருக்கும்

என்னை உன் நிழல் நெருங்கும

இதழில் புன்னகை பூ பூக்கும்,

இதழ் நெருங்கி பூ பறிக்கத்தான் வருகிறாய்

என்று காத்து என் இதழ் தாங்கி நிற்பேன்.

ஆனால், நீயோ புன்னகைக்கு புன்னகை போதும்

என்று ஏமாற்றி செல்வாய்.

மீண்டும் என் இதழ்கள் புன்னகை பூக்கும்,

ஏமாறுவதில் அப்படி என்ன மகிழ்ச்சி

என கிண்டல் செய்யும் என் இதழ்கள்,

நான் என் இதழ்களிடம் சொல்லடக்க சொன்னேன்,

எங்கே உன் இதழ்களுக்கு கேட்டு விடுமோ?

நீங்கள் இவளுக்காகவே படைக்கப்பட்டவர்கள்,

ஏமாறுவதானால் இவளிடம் தான்

ஏமாற வேண்டும்....என்று