“கண்” கொண்டு போGun கொண்டு போ,

பாதுக்கப்பாற்றவர்களை எதிர்கொள்ள

என்கிறார்கள்

நான் சொல்கிறேன் நீ கண் கொண்டு போ

அவர்களை பாதுகாப்பற்றவர்களாக

உணர வைக்க...................

சமாளிப்பிற்கு பரிசாக முத்தத்திற்கு சம்மதம் கிடைத்தது.

முத்தங்களுக்காக காத்திருக்கும்,

உன் இதழ்களுக்காக, முத்தங்களோடு

காத்துக் கிடக்கின்றன,என் இதழ்கள்....என்றேன்

ச்சீ எந்நேரமும் இதே நினைப்புதானா

என்கிறாய் வெட்கத்தோடு....

இல்லை, இல்லை, அவை என்

சொற்கள் இல்லை, அவை என் உதடுகள்

உதிர்த்ததால், உதடுகளின் விருப்பமாக

இருக்குமோ, என்னவோ? என்று நான் சமாளித்தேன்...

சமாளிப்பிற்கு பரிசாக முத்தத்திற்கு சம்மதம் கிடைத்தது.

உன்னை கட்டி அணைத்துக் கொள்கிறது சேலை

சேலையில் நான் அழகாயிருக்கிறேனா?

என்கிறாய்.

சேலைக்கு நீ அழகாயிருக்கிறாய்...என்கிறேன்.

சேலை வெட்கத்தில் உன்னை கட்டி அணைத்துக்

கொள்கிறது. சேலைக்குள் எங்கோ தொலைந்து

போகிறது உள்ளம்.

உன்னையே பார்த்துக் கொண்டிருக்கின்றன... காதல் கிளிகள்


வா வென்று கண்களால் என்னை அழைத்தாய்,

அப்படி என்னதான் பார்வையில் தைத்து அழைத்தாயோ

தன் இணையை பார்ப்பதை மறந்து

உன்னையே பார்த்துக் கொண்டிருக்கின்றன...

காதல் கிளிகள்


கவிதையாக்கி தந்தது உன் காதல்


உன் குறுஞ்செய்திக்காக,

காத்திருந்த பொழுதுகளில்,

அந்த பொழுதுகளை பழுதில்லாமல்,

கவிதையாக்கி தந்தது உன் காதல்

உன் முத்தங்கள் திருடி விடுவதாக களவு வட்டாரங்கள் உறுதியாக தெரிவித்தன..

உன்னை கவிதைகளோடு

தேடி வரும் இதழ்கள்......

நீ அருகில் இருக்கும்

பொழுதுகளில் தவற

விட்டு விடுகின்றன

சொற்களை....காதலாய்வு

செய்தால் சொற்களை

உன் முத்தங்கள்

திருடி விடுவதாக

களவு வட்டாரங்கள்

உறுதியாக தெரிவித்தன..

மேதமை,காதலில் மட்டுமே உண்டு


கையில் இனிப்பை வைத்துக்

கொண்டு இதழ்களை தேடும்

மேதமை,காதலில் மட்டுமே உண்டு


ஆண் தேவதையாகிப்போகிறேன்

உன்னைத் தேடி

உனக்காக,உனக்கான

கவிதைகள் சுமந்து

வரும் பொழுதுகளில்

நான் ஒரு ஆண்

தேவதையாகிப்போகிறேன்

பாதிக்காதல் - மோதி விளையாடு

அழுகைக்கு பின்பான உன் அணைப்பில்

கண்ணீரை கோர்த்து

காதலுடை செய்யலாம்,

கற்றுக்கொண்டேன்....

அழுகைக்கு பின்பான

உன் அணைப்பில்

தண்டனை போதும் விடுதலை வேண்டாம்

உன் விழிகளில் சிறைப்பட்டு கிடக்கிறேன்

ஆதலால், விரைவாக விடுதலை ஏதும்

தந்து விடாதே! தண்டனை போதும்....

என்ன கொஞ்சம் நீட்டிக்க வேண்டும்

கவிதைகளுக்கு இசையமைக்க கிளம்பிவிட்டாயோ?

என் கனவுகளில் வந்து

எப்பொழுதும் கவிதைகள்

படிக்கும் நீ, இசைக்கருவியோடு..

என் கவிதைகளுக்கு இசையமைக்க

கிளம்பிவிட்டாயோ?

என்ன புதையல் தேடுவேன்

நீ முகம் பார்க்கும் கண்ணாடியில்

“கண்” கொண்டு போGun கொண்டு போ,

பாதுக்கப்பாற்றவர்களை எதிர்கொள்ள

என்கிறார்கள்

நான் சொல்கிறேன் நீ கண் கொண்டு போ

அவர்களை பாதுகாப்பற்றவர்களாக

உணர வைக்க...................

சமாளிப்பிற்கு பரிசாக முத்தத்திற்கு சம்மதம் கிடைத்தது.

முத்தங்களுக்காக காத்திருக்கும்,

உன் இதழ்களுக்காக, முத்தங்களோடு

காத்துக் கிடக்கின்றன,என் இதழ்கள்....என்றேன்

ச்சீ எந்நேரமும் இதே நினைப்புதானா

என்கிறாய் வெட்கத்தோடு....

இல்லை, இல்லை, அவை என்

சொற்கள் இல்லை, அவை என் உதடுகள்

உதிர்த்ததால், உதடுகளின் விருப்பமாக

இருக்குமோ, என்னவோ? என்று நான் சமாளித்தேன்...

சமாளிப்பிற்கு பரிசாக முத்தத்திற்கு சம்மதம் கிடைத்தது.

உன்னை கட்டி அணைத்துக் கொள்கிறது சேலை

சேலையில் நான் அழகாயிருக்கிறேனா?

என்கிறாய்.

சேலைக்கு நீ அழகாயிருக்கிறாய்...என்கிறேன்.

சேலை வெட்கத்தில் உன்னை கட்டி அணைத்துக்

கொள்கிறது. சேலைக்குள் எங்கோ தொலைந்து

போகிறது உள்ளம்.

உன்னையே பார்த்துக் கொண்டிருக்கின்றன... காதல் கிளிகள்


வா வென்று கண்களால் என்னை அழைத்தாய்,

அப்படி என்னதான் பார்வையில் தைத்து அழைத்தாயோ

தன் இணையை பார்ப்பதை மறந்து

உன்னையே பார்த்துக் கொண்டிருக்கின்றன...

காதல் கிளிகள்


கவிதையாக்கி தந்தது உன் காதல்


உன் குறுஞ்செய்திக்காக,

காத்திருந்த பொழுதுகளில்,

அந்த பொழுதுகளை பழுதில்லாமல்,

கவிதையாக்கி தந்தது உன் காதல்

உன் முத்தங்கள் திருடி விடுவதாக களவு வட்டாரங்கள் உறுதியாக தெரிவித்தன..

உன்னை கவிதைகளோடு

தேடி வரும் இதழ்கள்......

நீ அருகில் இருக்கும்

பொழுதுகளில் தவற

விட்டு விடுகின்றன

சொற்களை....காதலாய்வு

செய்தால் சொற்களை

உன் முத்தங்கள்

திருடி விடுவதாக

களவு வட்டாரங்கள்

உறுதியாக தெரிவித்தன..

மேதமை,காதலில் மட்டுமே உண்டு


கையில் இனிப்பை வைத்துக்

கொண்டு இதழ்களை தேடும்

மேதமை,காதலில் மட்டுமே உண்டு


ஆண் தேவதையாகிப்போகிறேன்

உன்னைத் தேடி

உனக்காக,உனக்கான

கவிதைகள் சுமந்து

வரும் பொழுதுகளில்

நான் ஒரு ஆண்

தேவதையாகிப்போகிறேன்

பாதிக்காதல் - மோதி விளையாடு

அழுகைக்கு பின்பான உன் அணைப்பில்

கண்ணீரை கோர்த்து

காதலுடை செய்யலாம்,

கற்றுக்கொண்டேன்....

அழுகைக்கு பின்பான

உன் அணைப்பில்

தண்டனை போதும் விடுதலை வேண்டாம்

உன் விழிகளில் சிறைப்பட்டு கிடக்கிறேன்

ஆதலால், விரைவாக விடுதலை ஏதும்

தந்து விடாதே! தண்டனை போதும்....

என்ன கொஞ்சம் நீட்டிக்க வேண்டும்

கவிதைகளுக்கு இசையமைக்க கிளம்பிவிட்டாயோ?

என் கனவுகளில் வந்து

எப்பொழுதும் கவிதைகள்

படிக்கும் நீ, இசைக்கருவியோடு..

என் கவிதைகளுக்கு இசையமைக்க

கிளம்பிவிட்டாயோ?

என்ன புதையல் தேடுவேன்

நீ முகம் பார்க்கும் கண்ணாடியில்