சேலைகளுக்கு விருப்பம் வராதா என்ன?

சேலைகளின் நடுவில்

அழகு பதுமையாய் நீ

அமர்ந்திருந்தால், உன்னை

உடுத்திப் பார்க்க சேலைகளுக்கு

விருப்பம் வராதா என்ன?

இப்பொழுதுதானே காதலிக்க தொடங்கியிருக்கிறோம்

குறள் :

1130 - உவந்துறைவர் உள்ளத்துள் என்றும் இகந்துறைவர்

ஏதிலர் என்னுமிவ் வூர்.

என் குரல்:-

பிரிவு நமக்கு வரட்டும் என்று

நம்மை தொலைவில் வைத்திருக்கிறது ஊர்,

நெருக்கம் இன்னும் கூடட்டும்

என்று தெரிந்தே பிரித்திருக்கிறது காதல்.....

ஆம் காதல் நம்மிடமிருந்து பிரித்தெடுத்தது

நம்மிடையே அன்றாடம் நடக்கும் சண்டையை,

காத்திருத்தல் மறந்த விந்தையை,

இந்த பிரிவால் அனைவரும்

நாம் காதலிக்க மறந்துவிட்டோம்

என்று நினைக்கின்றனர்.

ஆனால், இப்பொழுதுதானே காதலிக்க

தொடங்கியிருக்கிறோம் என்று காதல்

கிண்டலாய் சிரிக்கிறது.

அடக்க முடியா கையடக்க தொலைப்பேசி

உன்னிடம் பேசும் வரை

என்னிடம் அடக்கமாக கைக்குள்

இருந்த கைப்பேசி, உன் குரலை

எனக்கு கொண்டு வருவதே அதுதான்

என்றானதிலிருந்து அடங்க மறுத்து.......

உன்னை விட என்னைதான் உன்னவளுக்கு

பிடிக்கும் என்று கிண்டல் அழிச்சாட்டியம் செய்வதே

என் கைப்பேசியின் வேலையாக போய் விட்டது....

ஆனால், இவற்றையெல்லாம் உன்னிடம்

சொன்னால் ச்சீ போங்க....என்று வெட்கத்தோடு

நம்ப மறுக்கிறாய்...

உன் வெட்கத்தையும் அடக்க முடிவதில்லை….

என் கைப்பேசியையும் அடக்க முடிவதில்லை
கொஞ்சம் சிரியுங்களேன்

என் இதழ்கள் அவசரப்பட்டு பேசிப் பழகுகின்றன...........

உன் கைப்பேசி அழைப்புகளுக்கு

காத்திருக்கும் என் இதழ்கள்,

அழைப்பு வரும் முன்

உன்னிடம் பேச ஒத்திகை பார்த்து

சில நேரங்களில் அவசரப்பட்டு

என் கைகளிடமே பேசிப் பழகுகின்றன............

சேலைகளுக்கு விருப்பம் வராதா என்ன?

சேலைகளின் நடுவில்

அழகு பதுமையாய் நீ

அமர்ந்திருந்தால், உன்னை

உடுத்திப் பார்க்க சேலைகளுக்கு

விருப்பம் வராதா என்ன?

இப்பொழுதுதானே காதலிக்க தொடங்கியிருக்கிறோம்

குறள் :

1130 - உவந்துறைவர் உள்ளத்துள் என்றும் இகந்துறைவர்

ஏதிலர் என்னுமிவ் வூர்.

என் குரல்:-

பிரிவு நமக்கு வரட்டும் என்று

நம்மை தொலைவில் வைத்திருக்கிறது ஊர்,

நெருக்கம் இன்னும் கூடட்டும்

என்று தெரிந்தே பிரித்திருக்கிறது காதல்.....

ஆம் காதல் நம்மிடமிருந்து பிரித்தெடுத்தது

நம்மிடையே அன்றாடம் நடக்கும் சண்டையை,

காத்திருத்தல் மறந்த விந்தையை,

இந்த பிரிவால் அனைவரும்

நாம் காதலிக்க மறந்துவிட்டோம்

என்று நினைக்கின்றனர்.

ஆனால், இப்பொழுதுதானே காதலிக்க

தொடங்கியிருக்கிறோம் என்று காதல்

கிண்டலாய் சிரிக்கிறது.

அடக்க முடியா கையடக்க தொலைப்பேசி

உன்னிடம் பேசும் வரை

என்னிடம் அடக்கமாக கைக்குள்

இருந்த கைப்பேசி, உன் குரலை

எனக்கு கொண்டு வருவதே அதுதான்

என்றானதிலிருந்து அடங்க மறுத்து.......

உன்னை விட என்னைதான் உன்னவளுக்கு

பிடிக்கும் என்று கிண்டல் அழிச்சாட்டியம் செய்வதே

என் கைப்பேசியின் வேலையாக போய் விட்டது....

ஆனால், இவற்றையெல்லாம் உன்னிடம்

சொன்னால் ச்சீ போங்க....என்று வெட்கத்தோடு

நம்ப மறுக்கிறாய்...

உன் வெட்கத்தையும் அடக்க முடிவதில்லை….

என் கைப்பேசியையும் அடக்க முடிவதில்லை
கொஞ்சம் சிரியுங்களேன்

என் இதழ்கள் அவசரப்பட்டு பேசிப் பழகுகின்றன...........

உன் கைப்பேசி அழைப்புகளுக்கு

காத்திருக்கும் என் இதழ்கள்,

அழைப்பு வரும் முன்

உன்னிடம் பேச ஒத்திகை பார்த்து

சில நேரங்களில் அவசரப்பட்டு

என் கைகளிடமே பேசிப் பழகுகின்றன............