நீ விலகிப்போவது சரிதானோ?

முன்பொரு நாள்

நாளும் உனை கண்டுதான் நாட்கள்

விலகிப்போயின, நாட்கள் போகிற கவலை

எனக்கிருந்ததில்லை, வருகிற நாட்களில்

உன்னை காணும் ஆவல் முதல் நாள்

இரவே தொற்றிக் கொள்ளும்....


நேற்றைய இரவில் அந்த ஆவல் இல்லை

அச்சம் தொற்றிக் கொண்டது....


ஒன்றுமில்லா சாதிக்கு சாதனை ஏதோ

இருப்பதாய் கருதிக்கொண்டு உன்னை

என்னிடமிருந்து விலக்கி கொண்டு

செல்கிறது காலம், அதை தடுக்கும் நிலையில்

நானில்லை தடுப்பது என்பதும் சரியில்லை.....


நீ எங்கு பறந்து சென்றாலும்..நீ அடையும் கூடு நான்

என்பதை நன்கறிவேன்.....


ஆனால், இன்று


உயிர்பிரியும் வலியை அறிந்து கொள்ளும்

வாய்ப்பு இன்று நீ எனக்கு தந்திருக்கிறாய்...

உயிர் மீண்டும் மீண்டு வந்து சேரும் என்ற

நம்பிக்கையில் காத்திருக்கிறேன்...


வலியை சொற்களுக்குள் அடைத்துவிட

முடியுமென்றால் இந்த சொற்க்குவியல்களிலின்

முடித்திருப்பேன்...சொற்கள் வலிக்குள் அடங்க

மறுத்து மீறுகிறது...


நன்றாக அறிவேன் தோழி

நான் இங்கே எழுதிக் கொண்டிருக்கும் வேளையில்

உன் விழியின் ஓரம் கண்ணீர் துளி கசிந்து

கொண்டிருக்கும் என்று..எனக்கிருக்கும்

வருத்தமெல்லாம் என் கைநீட்டி துடைக்கும்

தொலைவில் நீயில்லை என்பதுதான்


ஊருக்கு போராடுபவன் வாழ்க்கை

மகிழ்ச்சியாய் இருக்காது எச்சரிக்கை

செய்தாள் நான் கண்காணா தோழி...

ஆனால், ஊருக்கு போராட என்

தனிப்பட்ட வாழ்க்கையையே பாடமாக தந்து

விலகி நிற்கிறாய் நீ...


உனக்கு வலியை கொடுத்தவனுக்கே

திருப்பிக் கொடுஎன்று எம் தலைவன்

சொன்னானாம்...

இச்சமூகத்தின் பெரும் வலியாய் நிற்கும்

சாதிய பிண்டங்களுக்கு அதே வலியை

திருப்பி தரும் வரை போராடு என்று

என்னை பணித்திருக்கிறது....நம் காதல்


காலம் கனியும் தோழி...அல்லது கனிய வைப்போம்..


கண்காணா தொலைவிற்கு நீ சென்றாலும்...

உள்ளத்தின் நினைவலைகள் உன் கரை தேடியே ஒதுங்கும்....


இவ்வளவு உளறினாலும்....

உள்ளம் ஒன்றை மட்டும் கேட்டு வைக்க துடிக்கிறது...


நீ என்னை விலகிப்போவது சரிதானோ.........?

நீ விலகிப்போவது சரிதானோ?

முன்பொரு நாள்

நாளும் உனை கண்டுதான் நாட்கள்

விலகிப்போயின, நாட்கள் போகிற கவலை

எனக்கிருந்ததில்லை, வருகிற நாட்களில்

உன்னை காணும் ஆவல் முதல் நாள்

இரவே தொற்றிக் கொள்ளும்....


நேற்றைய இரவில் அந்த ஆவல் இல்லை

அச்சம் தொற்றிக் கொண்டது....


ஒன்றுமில்லா சாதிக்கு சாதனை ஏதோ

இருப்பதாய் கருதிக்கொண்டு உன்னை

என்னிடமிருந்து விலக்கி கொண்டு

செல்கிறது காலம், அதை தடுக்கும் நிலையில்

நானில்லை தடுப்பது என்பதும் சரியில்லை.....


நீ எங்கு பறந்து சென்றாலும்..நீ அடையும் கூடு நான்

என்பதை நன்கறிவேன்.....


ஆனால், இன்று


உயிர்பிரியும் வலியை அறிந்து கொள்ளும்

வாய்ப்பு இன்று நீ எனக்கு தந்திருக்கிறாய்...

உயிர் மீண்டும் மீண்டு வந்து சேரும் என்ற

நம்பிக்கையில் காத்திருக்கிறேன்...


வலியை சொற்களுக்குள் அடைத்துவிட

முடியுமென்றால் இந்த சொற்க்குவியல்களிலின்

முடித்திருப்பேன்...சொற்கள் வலிக்குள் அடங்க

மறுத்து மீறுகிறது...


நன்றாக அறிவேன் தோழி

நான் இங்கே எழுதிக் கொண்டிருக்கும் வேளையில்

உன் விழியின் ஓரம் கண்ணீர் துளி கசிந்து

கொண்டிருக்கும் என்று..எனக்கிருக்கும்

வருத்தமெல்லாம் என் கைநீட்டி துடைக்கும்

தொலைவில் நீயில்லை என்பதுதான்


ஊருக்கு போராடுபவன் வாழ்க்கை

மகிழ்ச்சியாய் இருக்காது எச்சரிக்கை

செய்தாள் நான் கண்காணா தோழி...

ஆனால், ஊருக்கு போராட என்

தனிப்பட்ட வாழ்க்கையையே பாடமாக தந்து

விலகி நிற்கிறாய் நீ...


உனக்கு வலியை கொடுத்தவனுக்கே

திருப்பிக் கொடுஎன்று எம் தலைவன்

சொன்னானாம்...

இச்சமூகத்தின் பெரும் வலியாய் நிற்கும்

சாதிய பிண்டங்களுக்கு அதே வலியை

திருப்பி தரும் வரை போராடு என்று

என்னை பணித்திருக்கிறது....நம் காதல்


காலம் கனியும் தோழி...அல்லது கனிய வைப்போம்..


கண்காணா தொலைவிற்கு நீ சென்றாலும்...

உள்ளத்தின் நினைவலைகள் உன் கரை தேடியே ஒதுங்கும்....


இவ்வளவு உளறினாலும்....

உள்ளம் ஒன்றை மட்டும் கேட்டு வைக்க துடிக்கிறது...


நீ என்னை விலகிப்போவது சரிதானோ.........?

5 comments:

சிவசுப்பிரமணியன் said...

Arumai thozhar

vimalavidya said...

Very nice and touching one>>In the field of poetry you continue to write more and more>>Love has strength.No doubt..continue Mahil
vimalavidya_Chalakuddy

ponnee said...

nice

ponnee said...

nice

தமிழ் மதி said...

//வலியை சொற்களுக்குள் அடைத்துவிட

முடியுமென்றால் இந்த சொற்க்குவியல்களிலின்

முடித்திருப்பேன்...சொற்கள் வலிக்குள் அடங்க

மறுத்து மீறுகிறது... //

அண்ணா என்ன ஆச்சு? வார்த்தைகள் அற்ற நிலையில் நான்......