உனக்கு நான்கு இதழ்கள்....

என் காதலியிடம் நீண்ட நாட்களுக்கு முன்பு கையளிக்கப்பட்ட படத்தொகுப்பில் இடம்பெற்ற சில கிறுக்கல்கள்

எவ்வளவுதான் அழகை சேமித்து வைத்திருக்கிறாய்

எவ்வளவுதான் முத்தமிட்டு நான் அழகாக முயற்சித்தாலும்

உன் அழகுக்கு மட்டும் குறைவில்லையே

நீ உண்மையிலேயே அள்ள அள்ள குறையாத அழகுபோனால் போகட்டும் என்று உன்னை இப்பொழுது

அணுஅணுவாய் ரசிக்கிறேன். சிறிது நாட்கள் செல்லட்டும்

ரசனை அணுக்கூறு அளவிலும் இருக்கும்எங்கு என் பயணத்தை துவக்கினாலும்

உன் காலடியிலேயே வந்து முடியும்

நீ என்னை கண்டு கூச்சப்படுகிறாய்

உன் உதடு சுழித்து நீ சிந்தும்

சிரிப்பை காணும் பொழுதுதான்

எனக்கும் கூச்சம் தொற்றி கொள்கிறது, என் செய்ய?

சில நேரங்களில் என்னையே பார்த்துக்

காத்துக் கொண்டிருக்கிறாய்...

குழப்பமாகிவிடுகிறது....

முத்தத்திற்கு இதழ்களா? கூச்சமா?என்று

உதடுகளை மறைக்காதே, இன்றைக்கு இப்பொழுது

அதிகமாய் வேண்டாம், ஒன்றிரண்டு முத்தம் மட்டும் போதும்....

மீதத்தை தவணை முறையில் நாளொன்று, பொழுதிரண்டு

என்று செலுத்தினால் போதும்...கட்டாயமாய் வசூலிக்க மாட்டேன்உனக்கு நான்கு இதழ்கள்....

ஆம், காது மடல்களையும் சேர்த்துதான்.........

இதழ்களைவிட அவைதான் முத்தங்களை

எதிர்ப்பார்த்து காத்துகிடக்கின்றன

No comments: