மௌன மொழியில் பேசுகிறாய்

--> --> --> --> -->
தொலைப்பேசியில் தமிழில்
பேசுவதற்கு பதிலாக
மௌன மொழியில் பேசுகிறாய்
கைப்பேசி சேவைக்காரன்
கட்டணம் கூடுகிறது என்று
பண மொழியில் கத்துகிறான்

நீதானா அந்த கொள்ளைக்காரி?

வங்கிக்கு பணம் செலுத்த போவதாய்

சொல்கிறாய், வங்கிக்கு சென்று

உன் அழகால் கொள்ளையடித்துவிடாதே

என்கிறேன் நான்.

உடனே வெட்கக்கவிதை சிந்துகிறாய்

என் உள்ளம் கொள்ளை போனது.

இனி உன் கால்தடங்களை................!

--> --> --> -->
ஆற்றங்கரையோர மணலில் நீ பதித்த
கால்தடங்களை பாதுகாக்க அழியாமல்
நீர் வற்றி வரண்டு போய்க் கொண்டிருக்கிறது
இனி உன் கால்தடங்களை
ஆற்றங்கரையிலிருந்து தொலைவிலேயே
பதித்து வை.......உன் பாதங்களை
காணும் பொருட்டாவது
ஆற்றில் நீர் நிரம்பட்டும்

கவிதை வற்றிக் கொண்டிருப்பது போன்றதொரு உணர்வு

--> -->
என்னுள் கவிதை வற்றிக் கொண்டிருப்பது
போன்றதொரு உணர்வு, காதில் காதல்
சொல்லாமல், வெறும் காதல் மட்டும்
செய்து கொண்டிருப்பதனால் வந்த விரிவு,
அந்த விரிவு உள்ளத்தில் ஏற்ப்பட்ட கீறலல்ல,
நீ நுழைந்த வழிப்பாதையின் கால்தடம்.
தினமும் உன்னை மட்டுமே காதலித்துக்
கொண்டிருப்பதால் ஏற்பட்டிருக்கும் அயற்சியா?
இல்லை, அது உன்னை இன்னும் இன்னும்
காதலிக்க வேண்டும் என்ற முயற்சியா?
காதலித்து கொண்டே இருப்பதனால்
கவிதை வடிக்க நேரம் போதவில்லை
ஆதலால், ஒன்று செய், இன்று முதல்
நீ என்னை காதல் செய், உன் அரவணைப்பின்
சூட்டிலேயே கவிதை வடிக்கிறேன் நான்.

காதல்-சமூக குடும்ப உறவுகளில் பங்களிப்பு

காதல் ஆண்-பெண் பாலின சேர்க்கைக்கு அடிப்படையாக இருக்கும் கருவியாக நாம் வாழும் சமூகத்தில் பார்க்கப்படுகிறது. இலக்கியங்களும், கவிதைகளும் காதல்தான் இருப்பதிலேயே முக்கியமான பிரச்சினையாக பாடிச்சென்றிருக்கின்றன, இன்னும் பாடிக்கொண்டிருக்கின்றன. இதற்கு மேலாக கடவுள் என்ற கருத்துக்கு போர்த்தப்படும் புனித பிம்பங்களும் இதை சுற்றி கட்டியமைக்கப்படுகின்றன. மனிதச் சமூகம் நாகரீகமடைந்து விரும்பியோ விரும்பாமலோ தாய் வழிச்சமூகத்திலிருந்து, பெண் தன் துணையை தானே தேர்ந்தெடுக்கும் முறையிலிருந்து, ஆண் குடும்ப தலைமையை ஏற்கும் ஆணாதிக்கச் சூழலில் நகர்த்தப்படும் குடும்ப கட்டமைப்பாக உருவாகிவிட்டது.

எப்படி புனிதங்கள் தொடக்கூடாத தொலைவில் இயல்பிலிருந்து ஒதுங்கி நிற்கிறதோ, அதே போல காதலும் இன்றைய இயல்பு வாழ்க்கையில் ஒதுங்கி நிற்கிறது, காதல் இயல்பானது என்றது மாறி புனிதமானது என்ற வட்டத்துக்குள் சென்று விட்டதால், பல்வேறு சிக்கல்களை சமூகத்திடமிருந்தும், தான் சார்ந்து வாழும் குடும்பத்திலிருந்தும் சந்திக்க வேண்டியிருக்கிறது. இந்தச் சிக்கல்களும்,எதிர்ப்புகளும் சமூகத்தில் ஏற்கனவே நிலவி வரும் சமூக அமைப்பின் இயங்குதலை பொருத்தே அமைகிறது.

இந்திய சமூகச்சூழலை பொருத்தவரை சாதியமும், அதை வலியிறுத்தும் மதமும், இந்த ஆதிக்கங்களை கட்டிக்காக்கும் ஆணாதிக்க போக்கும் பல்வேறு எதிர்ப்புகளை நியாயம் என்று கருதியே முன்வைக்கின்றன. இந்துத்வம் காதலை எதிர்ப்பதற்கு காரணம், தான் காப்பாற்றி வரும் சாதிய வருண கட்டமைப்பு தகர்ந்துவிடக்கூடாதே என்ற ஆதங்கத்தில்தான். அதனால்தான், பெண் என்பவள் ஆணுக்கு பாத்தியப்பட்டவள், ஆணின் சொத்து, ஆணால் பாதுகாக்கபட வேண்டியவள், அவளுக்கு சுயபுத்தி கிடையாது, ஆணின் உடலில் உடைமையிலும் மட்டுமே பெண் இச்சைக் கொண்டிருப்பாள், ஆதலால் பெண்ணிடம் எச்சரிக்கையாயிரு, உன்னை சார்ந்திருக்கும் பெண்களை காப்பாற்ற ஆயத்தமாய் இரு, இதை வலியிறுத்த இவர்களுக்கு ஒரு நாள் குறித்து பண்பாட்டு பண்டிகையாக ரக்சா பந்தன் சாதியை காப்பாற்ற, ஆணாதிக்கத்தை நிறுவ......... ஆனால், இதே இந்துத்வம் காதலை வெறுக்கிறது, கொண்டாட தடை விதிக்க கோருகிறது. தடை விதிக்க கோரும் இந்துத்வவாதிகள் யார்?

காமசூத்திரத்தை தத்துவமாக கொண்ட வாத்சாயணரின் நூலை புனிதம் என்று கொண்டாடுபவர்கள், கோயில் சிற்பங்களில் பாலியல் நிகழ்வுகளை வடித்து மகிழ்ச்சியடைபவர்கள்..........அஜந்தா எல்லோரா ஓவியங்களும் இதற்கு சாட்சி

மேற்குலகம் தங்களுடைய வணிக நலனை கருத்தில் கொண்டு உருவாக்கிய காதலர் தின கொண்டாட்டங்களை முதலாலித்துவ எதிர்ப்பு கொள்கையின் அடிப்படையில் நாம் எதிர்த்தாலும், இந்துத்வவாதிகள் கூறும் அடிப்படையில் நாம் அதை எதிர்க்கவில்லை.

எம்மை பொருத்தவரை காதல் செய்வதும், ஆண்-பெண் உறவுக்காக சேர்வதும் உயிர்களின் உரிமை. அதில் தலையிடும் உரிமையை காதல் என்ற உணர்வோ, காதல் என்ற பெயரால் இணைந்தவர்களோ வழங்கவில்லை. ஆனால், அதை எதிர்ப்பவர்கள் அந்த உரிமையை தட்டிப்பறித்து, தம் போலி மதிப்பை நிலைநிறுத்துவதில் அடாவடித்தனத்தில் இறங்குங்குகின்றனர். கட்டற்ற முறையில் காதலிக்கலாம், ஆனால், நாம் வாழும் சமூகத்தையும் கொஞ்சம் கருத்தில் கொள்ளும் அளவுக்கு காதலர்கள் என்று சொல்பவர்களுக்கு பக்குவம் வர வேண்டும். தான் வாழும் சமூகத்தின் இயங்கியலை புரிந்து கொள்ள வேண்டும்.

தன் பிள்ளை நல்ல துணையை தேர்ந்தெடுக்க முடியுமா? அந்த தேர்வு அவர்களது வாழ்க்கையின் மீத கணங்களில் மகிழ்ச்சியை வழங்குமா? தேர்ந்தெடுத்தால் சமூகம் மதித்து போற்றும் துணையை தேர்ந்தெடுப்பார்களா? தன் சாதிக்குள் தேர்ந்தெடுப்பார்களா? தன் பொருளாதார தகுதிக்குள் தேர்ந்தெடுப்பார்களா? என்ற கவலை பெற்றோருக்கு.

தன் பிள்ளைக்கு சிந்திக்கவரும் என்ற நம்பிக்கையின்மையும்,எங்கே தன்னிச்சையான முடிவில் மீதி வாழ்வு ரணமாகிவிடுமோ என்ற அக்கறையினாலோ மிகவும் பதட்டப்படுகிறார்கள். இந்த பதட்டத்தில் நியாயமில்லவே இல்லை என்று அறுதியிட்டு கூறமுடியாது. தானாக தேர்ந்தெடுத்த துணையோடு குடும்ப நல நீதிமன்றங்களில் வெவ்வேறு வரிசையில் காத்திருந்தும் மணவிலக்கு காதலர்கள் நிச்சயிக்கப்பட்ட திருமணத்திற்கு நிகராக நிற்கிறார்கள். பெற்றோர்களின் அக்கறையின் வெளிப்பாடகத்தான் இருக்குமோ, இவர்கள் அறிந்த செய்தியினால்தான் தன் பிள்ளை, குறிப்பாக காதல் திருமணத்தை பெற்றோர் மறுக்கின்றார்களா? என்ற அளவில் விவாதத்திற்கான அடுத்த கட்டத்தை இதை படிக்கும் நண்பர்களின் கருத்துக்கே விடுகிறேன்.

என் காதலி ஒரு பொறுக்கி, கருவாச்சி

நீ ஒரு பொறுக்கி

சிதறி கிடக்கும் தாள்களிலெல்லாம்

எனது கவிதைகள் தேடி, பொறுக்கி

படிப்பதால்

நானும் ஒரு ரவுடி

எனை கண்களால்

நீ கைது செய்ததினால்

நீ சிந்தனை சிற்பி

இதழால் சிரிப்பொலி

சிந்தி ஒரு கணம் எனை சிற்பமாக்கிவிடுவதால்

நீ ஒரு கருவாச்சி

கவிதைகள் உன்னால்

கருவாவதால்

கவிதைக்கு அவசரமா? உனக்கா?

எழுத்துப்பிழைகளோடு

நீ எழுதி தரும் கவிதைகள்தான்

நீ எனக்காக எழுதிய

அவசரத்தை அழகாய் தெரிவிக்கின்றன

கவிதைக்கு அவசரமா? உனக்கா?

என் கிறுக்கு உள்ளம் துள்ளி குதிக்கிறதே!!

எனக்கு உன்னை பிடிக்கவில்லை

என்று நீ சொல்லும் பொழுதுதான்

என் கிறுக்கு உள்ளம் துள்ளி குதிக்கிறது..

அப்பொழுதுதான்,

புதிது புதிதாய் உன்னை

காதலிக்க முடியுமாம்....

உன்னைத்தவிர........................!

--> --> -->
உன்னுடைய பிரிவில் உன்னைத்தவிர
எல்லோரிடமும் பேச முடிகிறது....
ஆனால், எல்லோரிடமும் உன்னைத்தவிர
வேறெதுவும் பேச முடிவதில்லை......
-----------------------------------------------------------------

பிரித்தால் ஆயிரம் ஹைக்கூ

--> -->
நீ கிழித்து போடும்
கந்தல் தாள்களில்
சிதறிக்கிடக்கும்
சொற்களை இணைத்தால்
நூறு கவிதைகள் கிடைக்கும்