கவிதை வற்றிக் கொண்டிருப்பது போன்றதொரு உணர்வு

--> -->
என்னுள் கவிதை வற்றிக் கொண்டிருப்பது
போன்றதொரு உணர்வு, காதில் காதல்
சொல்லாமல், வெறும் காதல் மட்டும்
செய்து கொண்டிருப்பதனால் வந்த விரிவு,
அந்த விரிவு உள்ளத்தில் ஏற்ப்பட்ட கீறலல்ல,
நீ நுழைந்த வழிப்பாதையின் கால்தடம்.
தினமும் உன்னை மட்டுமே காதலித்துக்
கொண்டிருப்பதால் ஏற்பட்டிருக்கும் அயற்சியா?
இல்லை, அது உன்னை இன்னும் இன்னும்
காதலிக்க வேண்டும் என்ற முயற்சியா?
காதலித்து கொண்டே இருப்பதனால்
கவிதை வடிக்க நேரம் போதவில்லை
ஆதலால், ஒன்று செய், இன்று முதல்
நீ என்னை காதல் செய், உன் அரவணைப்பின்
சூட்டிலேயே கவிதை வடிக்கிறேன் நான்.

கவிதை வற்றிக் கொண்டிருப்பது போன்றதொரு உணர்வு

--> -->
என்னுள் கவிதை வற்றிக் கொண்டிருப்பது
போன்றதொரு உணர்வு, காதில் காதல்
சொல்லாமல், வெறும் காதல் மட்டும்
செய்து கொண்டிருப்பதனால் வந்த விரிவு,
அந்த விரிவு உள்ளத்தில் ஏற்ப்பட்ட கீறலல்ல,
நீ நுழைந்த வழிப்பாதையின் கால்தடம்.
தினமும் உன்னை மட்டுமே காதலித்துக்
கொண்டிருப்பதால் ஏற்பட்டிருக்கும் அயற்சியா?
இல்லை, அது உன்னை இன்னும் இன்னும்
காதலிக்க வேண்டும் என்ற முயற்சியா?
காதலித்து கொண்டே இருப்பதனால்
கவிதை வடிக்க நேரம் போதவில்லை
ஆதலால், ஒன்று செய், இன்று முதல்
நீ என்னை காதல் செய், உன் அரவணைப்பின்
சூட்டிலேயே கவிதை வடிக்கிறேன் நான்.

No comments: