நீங்கள் எழுதுவதெல்லாம் அழகாயிருக்கும் என்றாய்..மறுத்தேன்

--> -->
என்னை பிரிந்திருக்கும் உன்னை
எழுத்துக்களால் அணைத்து கொள்கிறேன்
-->
--> -->
நான் எழுதுவது அழகாயிருக்கிறதா?
என்றேன்? நீங்கள் எழுதுவதெல்லாம்
அழகாயிருக்கும் என்றாய்..மறுத்தேன்..
ஆம், உன்னை பற்றி எழுதும் பொழுதுதான்
அழகாயிருக்கிறது என்றேன்.
வெட்கம் என்னும் புதுக்கவிதை சிந்தி
ஏற்றிக் கொண்டாய்
பொய்க்கூட அழகாகத்தான்
சொல்கிறாய் என்று மார்தட்டி
முத்தமிடுகிறாய்,
மெதுவாக தட்டு உள்ளே
என்னவள் ஓய்வெடுத்து
கொண்டிருக்கிறாள் என்கிறேன்.
உன்னைத்தான் சொல்கிறேன்
என்று தெரிந்தே, யாரவள்?
என்று பொய்ச்சினம் கொள்கிறாய்.
பொய்ச்சினம் போதும் உருகிவிடாதே அருகில் வா!
என்று மார்போடு அணைத்துக் கொள்கிறேன்,
நான் சுவாசிப்பதையும் நிறுத்திக் கொள்கிறேன்...
நீ உயிர்காற்றை சுவாசிக்கிறாய்
என் குறுதியில் அது பரவுகிறது..
பரவும் உன் உணர்வுகளை காண
வெள்ளையணுக்கள், சிகப்பணுக்கள்
வரிசையில் நிற்கின்றன, நீ இயக்கிய
கவிதை குறும்படம் காண..
இவையெல்லாவற்றையும் மறந்து மார்பில்
கண்ணீர் துளி சிந்து சொல்கிறாய்...
எனை பிரிந்துவிடாதே என்று 

நீங்கள் எழுதுவதெல்லாம் அழகாயிருக்கும் என்றாய்..மறுத்தேன்

--> -->
என்னை பிரிந்திருக்கும் உன்னை
எழுத்துக்களால் அணைத்து கொள்கிறேன்
-->
--> -->
நான் எழுதுவது அழகாயிருக்கிறதா?
என்றேன்? நீங்கள் எழுதுவதெல்லாம்
அழகாயிருக்கும் என்றாய்..மறுத்தேன்..
ஆம், உன்னை பற்றி எழுதும் பொழுதுதான்
அழகாயிருக்கிறது என்றேன்.
வெட்கம் என்னும் புதுக்கவிதை சிந்தி
ஏற்றிக் கொண்டாய்
பொய்க்கூட அழகாகத்தான்
சொல்கிறாய் என்று மார்தட்டி
முத்தமிடுகிறாய்,
மெதுவாக தட்டு உள்ளே
என்னவள் ஓய்வெடுத்து
கொண்டிருக்கிறாள் என்கிறேன்.
உன்னைத்தான் சொல்கிறேன்
என்று தெரிந்தே, யாரவள்?
என்று பொய்ச்சினம் கொள்கிறாய்.
பொய்ச்சினம் போதும் உருகிவிடாதே அருகில் வா!
என்று மார்போடு அணைத்துக் கொள்கிறேன்,
நான் சுவாசிப்பதையும் நிறுத்திக் கொள்கிறேன்...
நீ உயிர்காற்றை சுவாசிக்கிறாய்
என் குறுதியில் அது பரவுகிறது..
பரவும் உன் உணர்வுகளை காண
வெள்ளையணுக்கள், சிகப்பணுக்கள்
வரிசையில் நிற்கின்றன, நீ இயக்கிய
கவிதை குறும்படம் காண..
இவையெல்லாவற்றையும் மறந்து மார்பில்
கண்ணீர் துளி சிந்து சொல்கிறாய்...
எனை பிரிந்துவிடாதே என்று 

No comments: