பார்க்காத பொழுதுகளில் பேசிக்கொண்டிருக்கிறாய்

என் வீட்டறையில் அனைவரும்

பேசிக் கொண்டிருக்கையில்

நீ மட்டும் அமைதியாய்.....

நான் உன்னை பார்க்காத பொழுதுகளில்

பேசிக்கொண்டிருக்கிறாய் என்னோடு

அணைத்தலும்.........எரிதலும்............!!

கைப்பேசி அழைப்புகள்......

தொடக்கத்தில் என் பெயர்......

புதியதாய் பேச ஏதுமில்லாமல்.....

அன்றாட நலம் விசாரித்தல்.....

நடுவில் கிண்டல்...கேலி....

கடைசியில் மௌனம்.....

பின் அணைக்கப்படுகிறது கைப்பேசி.....

எரியத்தொடங்குகிறது காதல்.....

கொட்டினேன் அன்பு கட்டினேன்

உன் தலையில் கொட்டிய வேளை

என்னை திட்டிச் சொல்கிறாய்.....

அன்பாய் பேசத் தெரியாதா?என்று

நான் அன்பாய் பேசத் தெரியும்......

அன்பை கொட்டத்தான் தெரியவில்லை....

இப்படித்தான் கொட்டுவார்களோ என்று

தவறாக நினைத்துவிட்டேன்...... என்று சொல்கிறேன்

தவறாக நினைத்ததற்கு தண்டனையாக......

இன்று கனவில் நான் வர மாட்டேன்...என்கிறாய்

கொட்ட கொட்ட விழித்திருந்து மறுநாள்

உன்னை சந்திக்க வருகிறேன்...

சிவந்த கண்களை பார்த்து நீ கேட்கிறாய்..என்னாயிற்று?

உன்னை நினைத்துக் கொண்டேயிருந்த வேளையில்

கண்கள் பட்ட வெட்கத்தின் நிறம் என்கிறேன் நான்..

மன்னிச்சுக்கோடாஎன்கிறாய் நீ

இனி உன்னை கொட்ட வரும் வேளையில்

உன் நினைவுகளில் இரவெல்லாம்கொட்ட கொட்ட விழித்திருந்த

என் விழிகளை பார்த்து விழிகளால் சிரித்துவிடு...என்கிறேன் நான் அலட்டிக் கொள்ளாமல்.........

இதழால் சிரித்து அணைத்துக் கொள்கிறாய்....

உன் அன்பனைத்தும் என்னுள் விழுந்தது...

நீ உன் அன்பு முழுவதையும் என்னில் கொட்டியதை உணர்ந்தேன்...

அன்று அன்பாய் கொட்டுவதை கற்றுக் கொண்டேன்...நான்

ஓராயிரம் சொற்கள் வீசி!!!!

நானூறு சொற்களுக்கு மிகாமல்

கட்டுரை எழுதும் போட்டியில்

அரை மணி நேரம் கிடைத்தும்

நேரம் போதாமல் தோற்றுவிட்டேன்

நீ வென்று விட்டாய்,

ஒரே நொடி ஓரப்பார்வையில்

ஓராயிரம் சொற்கள் வீசி

காதல் உணவு

இதுநாள்வரை இரத்தம் பாய்ச்சுவதற்கு

துடித்துக் கொண்டிருந்த இதயம்....

உனக்கான காதல் பாய்ச்சுவதற்கு

துடித்துக் கொண்டிருக்கிறது....இன்று

இரத்தத்தில் ஆக்சிஜன் கலப்பதற்கு

பதிலாக இன்றெல்லாம் காதல் கவிதைகள்

கலந்து அனுப்புகிறது..........இதயம்......

உணவு செரிப்பதற்கு காலம் இதனால்தான்

எடுக்கிறதோ?என்னவோ?

ஆதலால், வயிற்றுக்கு உணவு மறந்துவிட்டது.....

விழியும் செவியும் மட்டும் உணவு உட்கொள்கிறது

காதல் உணவு

கதிரவன் பூக்கிறான் இதய வடிவில்

உன்னை காண

காத்துக் கிடக்கும்

ஒவ்வொரு காலையிலும்....

கதிரவன் பூக்கிறான்

இதய வடிவில்

எழுத்துக்களின் மாநாடு

--> --> -->
தமிழ்
எழுத்துக்கள் உள்ளம் நாடி,
ஓரிடத்தில் கூடி,
நடத்திய மாநாட்டின் தீர்மானத்தின்
தலைப்பு உன் பெயர்,
பொருளடக்கம் உனக்கான கவிதை 

சோப்பு நுரைகளும் சேட்டை செய்கின்றனவாம்

நீ செய்யும் சின்ன சின்ன சேட்டைகள்

சட்டைகளில் ஒட்டிக் கொள்வதை

கவனிக்காமல் சலவைக்கு சென்று விடுகின்றன..

ஆதலால், சலவை செய்யும் பொழுது

சோப்பு நுரைகளும் சேட்டை செய்கின்றனவாம்உன்னைத்தவிர......................ஆடியோ

--> --> --> --> --> --> -->
உன்னுடைய பிரிவில் உன்னைத்தவிர
எல்லோரிடமும் பேச முடிகிறது....
ஆனால், எல்லோரிடமும் உன்னைத்தவிர
வேறெதுவும் பேச முடிவதில்லை.......

மீண்டும் ஒரு முறை “ம் “ சொல்லும் முன்

ஆயிரம் சொற்களை

தேடி தேடி சேகரித்து வைத்திருந்தேன்....

உன்னோடு பேச

பிரிவின் பின்னான முதல் பகிர்வில்

முதல் முறையாக நீ ம் சொல்லும் வரை

ஒற்றை சொல் கூட மிஞ்சாமல் சிதறிப்போனாது...

ஒவ்வொன்றாய் சேகரித்துக் கொண்டிருக்கிறேன்...

மீண்டும் ஒரு முறை ம் சொல்லும் முன்

கனவில் வந்தாவது ஒரு முறை அந்த

ஆயிரம் சொற்களையும் பேசி விட வேண்டுமென்று.

வந்து சென்ற இடம் இவ்வளவு தொலைவாகிப்போனதோ?

--> -->
நெஞ்சில் முதல்நாள் நீ வந்திறங்கி தூவிய பூவிதழ்கள்
இன்றும் உனக்கான கவிதைகள் பேசுதடி...
ஆனால், உன் இதழ் பேசி உடன் கேட்க முடியாதபடி நான்............
தேவதை கதைகளில் வருவதைப்போல்..
நீ வானத்திலிருந்து வரவில்லை..
எதிர்வீட்டிலிருந்தே வந்தாய்....
வருகின்ற தொலைவு சுறுக்கமாக இருந்ததினால்...