கொட்டினேன் அன்பு கட்டினேன்

உன் தலையில் கொட்டிய வேளை

என்னை திட்டிச் சொல்கிறாய்.....

அன்பாய் பேசத் தெரியாதா?என்று

நான் அன்பாய் பேசத் தெரியும்......

அன்பை கொட்டத்தான் தெரியவில்லை....

இப்படித்தான் கொட்டுவார்களோ என்று

தவறாக நினைத்துவிட்டேன்...... என்று சொல்கிறேன்

தவறாக நினைத்ததற்கு தண்டனையாக......

இன்று கனவில் நான் வர மாட்டேன்...என்கிறாய்

கொட்ட கொட்ட விழித்திருந்து மறுநாள்

உன்னை சந்திக்க வருகிறேன்...

சிவந்த கண்களை பார்த்து நீ கேட்கிறாய்..என்னாயிற்று?

உன்னை நினைத்துக் கொண்டேயிருந்த வேளையில்

கண்கள் பட்ட வெட்கத்தின் நிறம் என்கிறேன் நான்..

மன்னிச்சுக்கோடாஎன்கிறாய் நீ

இனி உன்னை கொட்ட வரும் வேளையில்

உன் நினைவுகளில் இரவெல்லாம்கொட்ட கொட்ட விழித்திருந்த

என் விழிகளை பார்த்து விழிகளால் சிரித்துவிடு...என்கிறேன் நான் அலட்டிக் கொள்ளாமல்.........

இதழால் சிரித்து அணைத்துக் கொள்கிறாய்....

உன் அன்பனைத்தும் என்னுள் விழுந்தது...

நீ உன் அன்பு முழுவதையும் என்னில் கொட்டியதை உணர்ந்தேன்...

அன்று அன்பாய் கொட்டுவதை கற்றுக் கொண்டேன்...நான்

1 comment:

சங்கர் said...

அழகான வார்ப்பு வாழ்த்துக்கள் நண்பரே .

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் !!!