ஆம்,நினைவுகளின் குழந்தையாகிப் போகிறேன்.

--> -->
உன் இதழ் தடம் பிடித்து நான்
நடப்பதாய் கேலி செய்தாலும்,
உன் கரம் பிடித்து நடக்க வேண்டுமடா,
என்று நீ கெஞ்சல் குரலில் கொஞ்சி கேட்கும்
அழகு உன் காதலை தவிர வேறேது தரும்.
அம்மா சாதி காட்டி அச்சமூட்ட
அப்பா பாசமூட்டி எச்சரிக்கை மணியடிக்க,
அச்சமாக இருக்கிறது என்று ஒடி வந்து
எனை அணைத்து கொள்கிறாய்
உன் அச்ச, மடம், நாணம் விட்டு.
அலைபேசியில் அலைபோல
பேசும் நீ, நெருங்கி வந்து நீ
அமைதியாகி விட்டு என்னில்
புயல் மையம் கொள்ள செய்கிறாய்.
ஆனால், என் அகக்கரையை கடந்த
பாடில்லை, புயலும் காதலும் ஒரே
நேரத்தில் ஒரே இடத்தில் நிகழக்கூடிய
வியப்பை உன்னால் மட்டும் எப்படி
நிகழ்த்த முடிகிறது.
தத்தி நடைபழகிய நாட்கள் நினைவில்லை
அழகான அந்த பெற்றோரிடம் மீண்டும்
கேட்டாலும் பயனில்லை,
உன்னிடம் காதல் பயிலும் பொழுதுகளில்
நான் குழந்தையாகிப் போகிறேன்,
ஆம்,நினைவுகளின் குழந்தையாகிப் போகிறேன்.

ஆம்,நினைவுகளின் குழந்தையாகிப் போகிறேன்.

--> -->
உன் இதழ் தடம் பிடித்து நான்
நடப்பதாய் கேலி செய்தாலும்,
உன் கரம் பிடித்து நடக்க வேண்டுமடா,
என்று நீ கெஞ்சல் குரலில் கொஞ்சி கேட்கும்
அழகு உன் காதலை தவிர வேறேது தரும்.
அம்மா சாதி காட்டி அச்சமூட்ட
அப்பா பாசமூட்டி எச்சரிக்கை மணியடிக்க,
அச்சமாக இருக்கிறது என்று ஒடி வந்து
எனை அணைத்து கொள்கிறாய்
உன் அச்ச, மடம், நாணம் விட்டு.
அலைபேசியில் அலைபோல
பேசும் நீ, நெருங்கி வந்து நீ
அமைதியாகி விட்டு என்னில்
புயல் மையம் கொள்ள செய்கிறாய்.
ஆனால், என் அகக்கரையை கடந்த
பாடில்லை, புயலும் காதலும் ஒரே
நேரத்தில் ஒரே இடத்தில் நிகழக்கூடிய
வியப்பை உன்னால் மட்டும் எப்படி
நிகழ்த்த முடிகிறது.
தத்தி நடைபழகிய நாட்கள் நினைவில்லை
அழகான அந்த பெற்றோரிடம் மீண்டும்
கேட்டாலும் பயனில்லை,
உன்னிடம் காதல் பயிலும் பொழுதுகளில்
நான் குழந்தையாகிப் போகிறேன்,
ஆம்,நினைவுகளின் குழந்தையாகிப் போகிறேன்.