என் அணைப்பிற்கு காத்திருக்கும் என்பதனை

உன் கண்களில் காத்திருக்கும்
கண்ணீர், என் அணைப்பிற்கு
காத்திருக்கும் என்பதனை
நான் நன்கறிவேன்..

உன்னிடம் சண்டை போட்டு
விலகியிருக்கும் என்னை
உன்னிடம் அழைக்கும் திறவுகோல்,
உன் கண்ணீர் என்று தெரிந்தேதான்

சுரக்கிறது உன் கண்ணில்

காற்று படும் பாடு

காற்றில் அலைபாயும் உன் உடைகள்,
காற்று உன்னை தீண்டிவிடக்கூடாது என்பதற்குஎவ்வளவு பதட்டப்படுகின்றன பாரேன்....

உன் விரல் சுட்டிக் காட்டும் திசையில்

உன் விரல் சுட்டிக் காட்டும் திசையில்,
அமைதியாய் நடைபோடுகிறது என் உள்ளம்கண்களை உன்னை விட்டு விலக்காமல்..

கைகள் வீசி நீ அழைத்தபோது
கைகள் வீசி நீ அழைத்தபோது,
என்னிடமும் அனுமதி பெறாமல்
உன் மடியில் விழத் தயாரானது
என் உள்ளம்...

உன்னுடைய கோபமென்றால்
எனக்காக காத்திருந்த பொழுதுகளில்
உன் கைவிரல்களின் கோபம் மண்ணில்
வரைந்த பூக்கோலம்....மெய்யாலுமே
கோபத்திலும் கூட மலர்கள் மலரும்என்பதை உணர்ந்து கொண்டேன்

சோலைகள் சேலைகள் அணிவதில்லைசோலைகள் சேலைகள் அணிவதில்லை,
கவிஞர்கள் மிகையாக பாராட்டுகின்றனர்
என்ற என் விமர்சனத்திற்கு
உன் காதலியையும், உன் காதலையும்
சந்தித்தபின் என்னை வந்து சந்தி என்றனர்.
உன்னை சந்தித்த பின் அவர்களை
சந்திக்காமலேயே நான், சோலைகளை
உணர்ந்து கொண்டேன்..

ரசித்துவிட வேண்டும் என்பதற்காகவே

நீ அழகாய் பார்த்து, ஆர்வமாய்
ரசித்துவிட வேண்டும் என்பதற்காகவே,
என் திறமைகளை வளர்த்துக் கொள்கிறேன்.

சேட்டைகள் என் சட்டைகளில்

நீ வியந்து கைதட்டி பாராட்ட
வேண்டும் என்பதற்காகவே,
சேட்டைகள் என் சட்டைகளில்ஒட்டிக் கொள்கின்றன..

என் உள்ளத்தின் ஒரு பகுதியை கிள்ளி
கல்வி அறைக்கு நீ பை தூக்கி
போவதுதான் அனைவர் கண்ணுக்கும்
தெரியும், ஆனால்,என் உள்ளத்தின்
ஒரு பகுதியை கிள்ளி எடுத்து போனதுஎனக்கு மட்டும்தான் தெரியும்.

தன் வெட்பத்தை குறைத்து கொள்ள கதிரவன் முடிவுநீ நிழலில் படுத்திருப்பதை பார்த்து
தன் வெட்பத்தை குறைத்து கொள்ள
கதிரவன் முடிவு செய்து அனுப்பி வைத்ததுதான்
குளிர் காலமோ என்னவோ!

புற்கள் வருத்தப்பட்டன,நீலவானம் பெருமை கொண்டது
பசுமையான வயல்வெளியில்
பச்சை சேலை போர்த்தியிருப்பதாய்
கவிஞர்கள் கவி பாட, நீயோ
நீல நிற சேலை உடுத்தி வந்தாய்
தங்கள் பசுமை நிறத்திற்கு புற்கள் வருத்தப்பட்டன,நீலவானம் பெருமை கொண்டது...

பொம்மைகளுக்கு பொறாமை

உடைக்கடையில் நீ பொம்மையின்
அருகில் நிற்கும் பொழுதுகளில்
பொம்மைகளுக்கு பொறாமை,
எங்கே தன்னை எடுத்து உன்னை நிறுத்திவிடுவார்களோ என்று!

புவி தன் புவியீர்ப்பு விசை கொண்ட காரணம்

புவி தன் புவியீர்ப்பு விசை கொண்ட
காரணத்தை இன்றுதான் உணர்ந்தாம்,
நீ சாய்ந்துறங்க உன்னை தாங்கிக் கொள்ளும்வாய்ப்பு கிடைத்ததால்.

பூக்களின் நடுவே அமர்ந்திருப்பதாய்

பூக்களின் நடுவே அமர்ந்திருப்பதாய்
கூறுகிறாய்!
ஆனால், அவள் பெருந்தன்மையாய் கூறுகிறாள்,
அவள் அமர்ந்திருப்பதால்தான் மலர்ந்திருக்கிறோமென்றுமொட்டுக்கள் புகார் தெரிவிக்கின்றன....