மலருக்கு பதிலாக இதழ்கள் வேண்டுமானால் தருகிறேன்நான் மலர் போல் மெல்லியவன் இல்லை

என்பதற்காக, மெல்லிய மலரை

கொடூரமாக அதன் காம்புகளிலிருந்து

பறித்து, பிரித்து உன்னிடம் தருவதில் எனக்கு

உடன்பாடில்லை...

மலருக்கு பதிலாக இதழ்கள் வேண்டுமானால் தருகிறேன்..

நம் நிழல்கள் சந்திக்க நேர்ந்தால்இரவு நிலா வெளிச்சத்தில்,

இருவரும் நடந்து போகும்

வழியில், நம் நிழல்கள் சந்திக்க நேர்ந்தால்,

நம்மை மறந்து விட்டு, அப்படி

என்னதான் பேசிக் கொள்ளுமோ?

தேவதை நீ, கடவுளை வணங்கலாமா?


பாமரப் பெண்கள் கடவுள் என்ற

கற்பனையிடம் வேண்டுவது இயல்பு,

என் கனவுகளுக்கு உயிர் வந்த பின்பு

தோன்றிய உண்மை தேவதை நீ,

நீ கடவுளை வணங்கலாமா?

பூக்களின் நப்பாசைதான் காரணமாக இருக்கும்


நீ ஆடப்போகும் ஊஞ்சல்

என்று தெரிந்தவுடனே

பூங்கொடிகள் எப்படி,

ஊஞ்சலின் கைக்கயிற்றை

சுற்றியிருக்கின்றன பாரேன்...

அப்படியாவது வண்ணத்துப்பூச்சிகள்

தங்களையும் சுற்றாதா, என்ற பூக்களின்

நப்பாசைதான் காரணமாக இருக்கும்.

அப்படித்தானே..............

மலருக்கு பதிலாக இதழ்கள் வேண்டுமானால் தருகிறேன்நான் மலர் போல் மெல்லியவன் இல்லை

என்பதற்காக, மெல்லிய மலரை

கொடூரமாக அதன் காம்புகளிலிருந்து

பறித்து, பிரித்து உன்னிடம் தருவதில் எனக்கு

உடன்பாடில்லை...

மலருக்கு பதிலாக இதழ்கள் வேண்டுமானால் தருகிறேன்..

நம் நிழல்கள் சந்திக்க நேர்ந்தால்இரவு நிலா வெளிச்சத்தில்,

இருவரும் நடந்து போகும்

வழியில், நம் நிழல்கள் சந்திக்க நேர்ந்தால்,

நம்மை மறந்து விட்டு, அப்படி

என்னதான் பேசிக் கொள்ளுமோ?

தேவதை நீ, கடவுளை வணங்கலாமா?


பாமரப் பெண்கள் கடவுள் என்ற

கற்பனையிடம் வேண்டுவது இயல்பு,

என் கனவுகளுக்கு உயிர் வந்த பின்பு

தோன்றிய உண்மை தேவதை நீ,

நீ கடவுளை வணங்கலாமா?

பூக்களின் நப்பாசைதான் காரணமாக இருக்கும்


நீ ஆடப்போகும் ஊஞ்சல்

என்று தெரிந்தவுடனே

பூங்கொடிகள் எப்படி,

ஊஞ்சலின் கைக்கயிற்றை

சுற்றியிருக்கின்றன பாரேன்...

அப்படியாவது வண்ணத்துப்பூச்சிகள்

தங்களையும் சுற்றாதா, என்ற பூக்களின்

நப்பாசைதான் காரணமாக இருக்கும்.

அப்படித்தானே..............