இப்பொழுதுதானே காதலிக்க தொடங்கியிருக்கிறோம்

குறள் :

1130 - உவந்துறைவர் உள்ளத்துள் என்றும் இகந்துறைவர்

ஏதிலர் என்னுமிவ் வூர்.

என் குரல்:-

பிரிவு நமக்கு வரட்டும் என்று

நம்மை தொலைவில் வைத்திருக்கிறது ஊர்,

நெருக்கம் இன்னும் கூடட்டும்

என்று தெரிந்தே பிரித்திருக்கிறது காதல்.....

ஆம் காதல் நம்மிடமிருந்து பிரித்தெடுத்தது

நம்மிடையே அன்றாடம் நடக்கும் சண்டையை,

காத்திருத்தல் மறந்த விந்தையை,

இந்த பிரிவால் அனைவரும்

நாம் காதலிக்க மறந்துவிட்டோம்

என்று நினைக்கின்றனர்.

ஆனால், இப்பொழுதுதானே காதலிக்க

தொடங்கியிருக்கிறோம் என்று காதல்

கிண்டலாய் சிரிக்கிறது.