என் காதலி ஒரு பொறுக்கி, கருவாச்சி

நீ ஒரு பொறுக்கி

சிதறி கிடக்கும் தாள்களிலெல்லாம்

எனது கவிதைகள் தேடி, பொறுக்கி

படிப்பதால்


நானும் ஒரு ரவுடி

எனை கண்களால்

நீ கைது செய்ததினால்

நீ சிந்தனை சிற்பி

இதழால் சிரிப்பொலி

சிந்தி ஒரு கணம் எனை சிற்பமாக்கிவிடுவதால்


நீ ஒரு கருவாச்சி

கவிதைகள் உன்னால்

கருவாவதால்

கவிதைக்கு அவசரமா? உனக்கா?

எழுத்துப்பிழைகளோடு

நீ எழுதி தரும் கவிதைகள்தான்

நீ எனக்காக எழுதிய

அவசரத்தை அழகாய் தெரிவிக்கின்றன

கவிதைக்கு அவசரமா? உனக்கா?

என் கிறுக்கு உள்ளம் துள்ளி குதிக்கிறதே!!

எனக்கு உன்னை பிடிக்கவில்லை

என்று நீ சொல்லும் பொழுதுதான்

என் கிறுக்கு உள்ளம் துள்ளி குதிக்கிறது..

அப்பொழுதுதான்,

புதிது புதிதாய் உன்னை

காதலிக்க முடியுமாம்....

என் காதலி ஒரு பொறுக்கி, கருவாச்சி

நீ ஒரு பொறுக்கி

சிதறி கிடக்கும் தாள்களிலெல்லாம்

எனது கவிதைகள் தேடி, பொறுக்கி

படிப்பதால்


நானும் ஒரு ரவுடி

எனை கண்களால்

நீ கைது செய்ததினால்

நீ சிந்தனை சிற்பி

இதழால் சிரிப்பொலி

சிந்தி ஒரு கணம் எனை சிற்பமாக்கிவிடுவதால்


நீ ஒரு கருவாச்சி

கவிதைகள் உன்னால்

கருவாவதால்

கவிதைக்கு அவசரமா? உனக்கா?

எழுத்துப்பிழைகளோடு

நீ எழுதி தரும் கவிதைகள்தான்

நீ எனக்காக எழுதிய

அவசரத்தை அழகாய் தெரிவிக்கின்றன

கவிதைக்கு அவசரமா? உனக்கா?

என் கிறுக்கு உள்ளம் துள்ளி குதிக்கிறதே!!

எனக்கு உன்னை பிடிக்கவில்லை

என்று நீ சொல்லும் பொழுதுதான்

என் கிறுக்கு உள்ளம் துள்ளி குதிக்கிறது..

அப்பொழுதுதான்,

புதிது புதிதாய் உன்னை

காதலிக்க முடியுமாம்....