உன் தனிமையை சந்திக்க....!

என்னோடு எப்போதுமிருந்த தனிமை,

இப்பொழுதெல்லாம் துணை தேடி

என்னைவிட்டு சென்றுவிடுகிறது...

உன் தனிமையை சந்திக்க....!

உன் இதய பந்தல் தேடி இளைப்பாறும்

இதயம் பறிப்பதும்,

மலர்கள் பறிப்பதும், கைவந்த கலையோ உனக்கு...?

உன்னைச் சொல்லி குற்றமில்லை...

கூந்தல் தேடி அமரும் மலரைப் போல

உன் இதய பந்தல் தேடி இளைப்பாறும்,

என் இதயத்திடம் சொல்ல வேண்டும்

ஏனடா என் பறித்துச் சென்றாய்...?

ஏதோ ஒரு பிடிவாத நாளில்

என் உள்ளம் உன்னை நினைப்பதில்லை....

இதயம் உனக்காய் துடிப்பதில்லை..என்றேன்...

சரிதான் போடி? என்று சினந்து சென்ற நீ..

ஏனடா என் உள்ளம் பறித்துச் சென்றாய்...?

பாலை போன்ற உலகில் உனக்கான காதல்

பிறப்பிற்கு முன்பே தன் குழந்தைக்காக

தாய் தன் மார்பில் சேமித்து வைக்கும்…

பாலை போலவே, நீ இல்லாத பாலை

போன்ற உலகில் பத்திரமாக

உனக்கான காதலை

என் உள்ளத்தில் சேமித்து வைத்திருக்கிறேன்…

வந்து பருகிச் செல்

ஆற்றின் நிம்மதியை கெடுத்துவிட்டாயே

ஆற்றுக்குள் படகை கடத்தி சென்று

நிம்மதியாக உறங்குகிறாய்…

ஆறு நிம்மதியில்லாமல் விழித்து கொண்டிருக்கிறது

இயற்கை என்ன உனக்கு அத்தனை நெருக்கமா?

செயற்கை அலைபேசிகளை

அனைவரும் பயன்படுத்த...

நீ மட்டும் குருவியை பயன்படுத்துகிறாயே?

இயற்கை என்ன உனக்கு அத்தனை நெருக்கமா?

-------------------------------------------------------------------------

என்னிடம் ரகசியம் கேட்கும் குருவிகள்

அத்தனையும், உன்னிடம் ரகசியங்களை

கொட்டிவிடுவதன் ரகசியம் என்னவோ?


கோழியிட்ட முத்திரை

என் வீட்டு கோழிகளுக்கு

நீ கொடுத்த முத்தமோ என்னவோ..

முட்டையில் கோழிகள் பதித்த

முத்திரையை பார்…

==========================

இளநீர் முட்டையாகிப் போனதும்

தென்னை மரத்தின் கீழ் நீ நின்ற குழப்பதினாலோ என்னவோ

பனை தாண்டி தென்னைக்கு வந்துவிட்டாயே

உன் தனிமையை சந்திக்க....!

என்னோடு எப்போதுமிருந்த தனிமை,

இப்பொழுதெல்லாம் துணை தேடி

என்னைவிட்டு சென்றுவிடுகிறது...

உன் தனிமையை சந்திக்க....!

உன் இதய பந்தல் தேடி இளைப்பாறும்

இதயம் பறிப்பதும்,

மலர்கள் பறிப்பதும், கைவந்த கலையோ உனக்கு...?

உன்னைச் சொல்லி குற்றமில்லை...

கூந்தல் தேடி அமரும் மலரைப் போல

உன் இதய பந்தல் தேடி இளைப்பாறும்,

என் இதயத்திடம் சொல்ல வேண்டும்

ஏனடா என் பறித்துச் சென்றாய்...?

ஏதோ ஒரு பிடிவாத நாளில்

என் உள்ளம் உன்னை நினைப்பதில்லை....

இதயம் உனக்காய் துடிப்பதில்லை..என்றேன்...

சரிதான் போடி? என்று சினந்து சென்ற நீ..

ஏனடா என் உள்ளம் பறித்துச் சென்றாய்...?

பாலை போன்ற உலகில் உனக்கான காதல்

பிறப்பிற்கு முன்பே தன் குழந்தைக்காக

தாய் தன் மார்பில் சேமித்து வைக்கும்…

பாலை போலவே, நீ இல்லாத பாலை

போன்ற உலகில் பத்திரமாக

உனக்கான காதலை

என் உள்ளத்தில் சேமித்து வைத்திருக்கிறேன்…

வந்து பருகிச் செல்

ஆற்றின் நிம்மதியை கெடுத்துவிட்டாயே

ஆற்றுக்குள் படகை கடத்தி சென்று

நிம்மதியாக உறங்குகிறாய்…

ஆறு நிம்மதியில்லாமல் விழித்து கொண்டிருக்கிறது

இயற்கை என்ன உனக்கு அத்தனை நெருக்கமா?

செயற்கை அலைபேசிகளை

அனைவரும் பயன்படுத்த...

நீ மட்டும் குருவியை பயன்படுத்துகிறாயே?

இயற்கை என்ன உனக்கு அத்தனை நெருக்கமா?

-------------------------------------------------------------------------

என்னிடம் ரகசியம் கேட்கும் குருவிகள்

அத்தனையும், உன்னிடம் ரகசியங்களை

கொட்டிவிடுவதன் ரகசியம் என்னவோ?


கோழியிட்ட முத்திரை

என் வீட்டு கோழிகளுக்கு

நீ கொடுத்த முத்தமோ என்னவோ..

முட்டையில் கோழிகள் பதித்த

முத்திரையை பார்…

==========================

இளநீர் முட்டையாகிப் போனதும்

தென்னை மரத்தின் கீழ் நீ நின்ற குழப்பதினாலோ என்னவோ

பனை தாண்டி தென்னைக்கு வந்துவிட்டாயே