உன்னை அடைவதற்காகத்தானென்று

நீ கடந்து சென்ற வழியே

நடந்து செல்லும் பொழுது....

வழி கேலி செய்கிறது.......

என்னை கடந்து செல்லலாம்...

உன்னவளை கடந்து செல்லும்....

துணிவு உனக்கு கிடையாது.என்று....

அதற்கென்ன தெரியும்........

நான் கடக்கும் வழி(லி)களே..

உன்னை அடைவதற்காகத்தானென்று

இது......எது?

உன்னைப்பற்றி கவிதை எழுத

அது....இது என்று தேடிக் கொண்டிருக்கிறேன்

இதுவரை அகப்படவில்லை.........

உன் பிரிவை என்னில்

புதைத்து சென்றிருக்கு நீ

உன் கவிதைகளை விதைத்து சென்றிருக்கும்

தோட்டத்தின் பெயர்தான் என்ன? ஒருமுறை

சொல்..........அந்த தோட்டத்தின்

மலரும் பூக்களையாவது பறித்து

கவிதைகளை பிரதி எடுத்துக் கொள்கிறேன்.

நீ வர வேண்டும்

-->
--> -->
நீ கற்றுக்கொடுத்த
தமிழில்தான் கவிதை எழுதுகிறேன்.....
பிழை திருத்தவாவது நீ வர வேண்டும்
பிரிந்து சென்ற நீ பரிசளித்த பிரிவோடுதான்
இன்று வரை......நாள் கடத்துகிறேன்....
பிரிவை என்னிடமிருந்து பிரிக்கவாவது நீ வர வேண்டும்
உன் மடிசாய்ந்து
ஒரு நொடியேனும் உறங்கிவிட
இன்றுவரை காத்திருக்கிறது
ஒற்றை கண்ணீர் துளி..என் கண்களில்
அந்த ஒரு துளியை உன்னிடம்
ஒப்படைப்பதற்காகவாவது
நீ வர வேண்டும்
நீ வர வேண்டும்......என வேண்டும்...

கவிதை எழுதச்சொல்லி அடம்பிடிக்கிறாய்........

எழுதுகோலையும்,

எழுதும் தாளையும் பிடுங்கி

கையில் வைத்துக் கொண்டு

கவிதை எழுதச்சொல்லி அடம்பிடிக்கிறாய்........

எப்படி என்னால் கவிதை எழுத முடியும்?

உன் சேட்டைகளில் சிதறும்

கவிதைகளையல்லவா நான் படித்துக் கொண்டிருக்கிறேன்

தோழிகளும்.........காதலியும்

காதலும், கவிதையும் பல நேரங்களில் அறியாமையாக தோன்றலாம் . அறியாமைகள் பல நேரங்களில் அழகு கூட்டுபவை. குழந்தையின் வெள்ளந்தியான அறியாமையினூடாக எழும் கேள்வி அழகானது இல்லையா?

இதேபோல்தான் காதலி காதலனிடமும், காதலன் காதலியிடமும் சில, பல நேரங்களில் உண்மையாக என்னை பிடிச்சிருக்கா? என்று அறிந்தும் அறியாமல் கேட்கும்பொழுது அநத பொழுதில் நிகழும் அறியாமையில் அழகைத்தவிர வேறேது மிஞ்சும். ஏங்கவும், உள்ளத்தை தாங்கவும் காதலும், கவிதைக்கு மட்டுமே சாத்தியம்.

அவிழ்க்க முடியாத புதிர் போன்று சொல்ல முடியாத சொற்கள், சொல்ல தவிர்க்க முடியாத சொற்கள் இரண்டும் கலந்தே காதலும், கவிதையும் வாழ்கிறது. கடிதங்களில் முற்று பெறாதவைகளாகி திசை தெரியாமல் நிற்கும் சொற்கள் கவிதைகளில் தவறி விழுந்துவிடுகின்றன உள்ளத்தில்.........கவிகள் சொல்ல முடியா சொற்களை சில காதல் தருணங்கள் கவிதைகளாக்கிவிடுகின்றன வாழ்க்கையில்

அமிழ்ந்து விடும் சொற்களை

உமிழ்ந்துவிடும் துணிவில்லை

சொற்கள் தொண்டையில் சிக்கிய

மீன் முள்ளாய் நெருடினாலும்

மீன்விழிகளை பார்க்கும்பொழுது

முள்ளோடு தொண்டைக்குழி வழியாக

அந்த மீன் இதயக்குழாய்களில் நீந்தாதா

என்ற ஏக்கம் இல்லாமல் இல்லை

பிரிவிக்கு பரிவு கிடையாது. நாம் உணரவிரும்பா அன்பின் ஆழத்தையும், பறிக்கப்பட்ட உள்ளத்தையும், தொலைக்கப்பட்ட தருணத்தையும் மெல்லிய புன்சிரிப்பையும், ஓங்கி சிரித்த பொழுதுகளையும் நினைவுப்படுத்திக் கொண்ட இருக்கும்.

எப்படி சொல்வேன் அவளிடம்

இவ்விடமும் அதே நிலை என்பதனை

ரோஜா, கைக்குட்டை, புத்தகம்

என அனைத்தையும் சேகரித்த நீ

என் மணித்துளிகளையும் சேர்த்தே

ஏன் சேகரித்திருக்கூடாது?

தோழிகள் எப்படித்தான் அழகாகிறார்களோ? தெரியாது. கொடுத்த பொழுதுகளை சுவைகூட்டி, பல மணித்துளிகளை திருடிவிட்டு தருகிறார்கள், நாம் கொடுத்த பொழுதுகளில் எடை குறைவதில்லை, குறைந்த பொழுதுகளை கண்டுபிடித்துவிட்டாலும், விடை தேட உள்ளம் இடம் தருவதில்லை, திருடியது தோழிகள்தானே என்று விட்டுவிடுகிறது.

காதலி இருப்பதனாலேயே தோழிகளாகிறவர்கள் தோழிகளாகவே இருந்து விடுகின்றனர், காதலி என்ற ஒருத்தி ஒருத்தியாகவே இருந்துவிட்டு போகட்டும் என்று வரம் தந்துவிட்டு.

பேசாப்பொருளை பேச வந்தேன்

என் இதழ்கள்

நீ பேசும்பொழுதுகளில் அமைதியாகி

நீ பேசாப்பொழுதுகளில்......

ஏதோ பேசாப்பொருளை பேச

வந்ததைப் போல ஜெபம் செய்கிறது..

உன் பெயரை

உனக்கு பிடித்த மஞ்சள் ரோசாவிடம் மட்டும்

பூக்கள் பறிப்பதிலே உண்மையிலேயே

விருப்பமில்லை எனக்கு,

உனக்கு பிடித்த மஞ்சள் ரோசாவிடம் மட்டும்

மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன், எப்பொழுதாவது.

என்னை மன்னித்து ஏற்றுக் கொள்கிறது......

செடியில் இருந்து கொடிக்கு இடமாற்றியதற்கு

உள்ளத்தில் அப்படித்தான் இருக்கமோ

அந்த நிழற்படத்தில்

உன் பார்வையை மொழி பெயர்த்துச்

சொல்கிறான் என் தோழன்

அவன் தாய்மொழியில்..

அப்படியெல்லாம் இல்லை என்று

மறுத்துச் சொல்கிறேன் என் வாய்மொழியில்...

உள்ளத்தில் அப்படித்தான் இருக்கமோ என்ற.........ஆவலோடு