என் தேவ‌தையின் பிற‌ந்த‌நாள்என் தேவ‌தையின் பிற‌ந்த‌நாள்
தேவையான‌ வாலிப‌ வ‌தையை
த‌ர‌ ஒரு அழ‌கியாய் வ‌ள‌ர‌‌ பிற‌ந்த‌ நாள்........

காதும‌ட‌லோர‌ம் சிகை வீசி,
கைக‌ளிலிலே த‌ன் விர‌ல் பூசி,
பேச‌ எத்த‌னிக்கும் பொழுதுக‌ளிலெல்லாம்
என் இத‌ழ்க‌ளினோர‌ம் முத்த‌ தூசி எடுத்த‌வ‌ளின்
பிற‌ந்த‌நாள்.........

(ம்ம்.........தூய‌ த‌மிழ் பேசி நாட்க‌ள் ப‌ல‌ ஆகிவிட்ட‌ன‌.........)

என் இதழ் முத்த‌தூசி எடுப்ப‌வ‌ள்
குறித்து ஊசி அள‌வு த‌க‌வ‌ல்
கிடைத்தால் சொல்லுங்க‌ள்.......

க‌ழுத்துக்கு பாசிமாலையோடு,
வாழ்த்துச் சொல்ல‌
கையும், இத‌ழுமாய் காத்து கிட‌க்கிறான்
உன் காத‌ல‌ன் என்று.............

நாண அலை உன்னில் வீசும்

கவிதை சொல்லுவேன் மெல்ல
நம் கதைகள் மெல்லுவேன்
நாண அலை உன்னில் வீசும்
சொல்ல என் இதழே கூசும்

கதையின் தொடக்கத்திலே
என் முகம் உன்னிடமில்லை
என் வசம் உன் முகம் இல்லை
பதின் வயதை நீ கடக்க
எனை தொடர்ந்து வந்தாய்
முதல் முத்தமாய் முதல் பார்வை
என் இதழ் நகைக்க சிலநொடிகள் தந்தாய்
தயக்கத்தோடு அறிமுகமானோம்
கைகுலுக்ககூட தயங்கி நின்றோம்

தயக்கம் மறைந்து, மயக்கம் கலந்த
நட்பு தொற்றிக் கொண்டது
எனக்கே எனக்காய் தோட்டம் அமைத்து
நீ மட்டும் பூத்து கொண்டாய்
கண்பட்ட பின்பும், பட்டு போகாத
கைபடாத ரோசா என்றாய்......

நினைவுகளும் சிரிப்புமாய் வளர்ந்தது
நம் நட்பு, பிரிய போகிறோம்
என்றதும், நம் சிரிப்பை நாமே
பறிக்க தயங்கினோம்
முன்பு பறித்தோம், மீண்டும் சிரிப்போம்
என்ற நம்பிக்கையில்......

சொல்ல துணியா சொற்களை
சொல்லிவிட துணிந்து
மடல்கள் பரிமாறிக் கொண்டோம்
ஆனாலும், அரைகால் புள்ளியில்
மீதமிருந்தன சொல்ல தயங்கிய சொற்கள்

ஏதோ ஒரு தவிர்க்கமுடியாத
தவிப்பில், தவிர்க்காமல்
சொன்னேன் என் தவிப்பை.....
நீயோ ஏற்காமல் மறுக்கவில்லை...
ஏற்கவும் ஏனோ துணிவில்லை உனக்கு

உன் உள்ளத்தோடு பிறர் பேச
நீ உன் உள்ளத்தோடு
சில காலம் பேசுவதை தவிர்த்தாய்
முழுவதுமாய் புறக்கணிக்க முடியாமல்
உன் ஆறுதலுக்கு ஆறுதலாய்
என்னிடம் பேசி கடந்தாய்

உன் கைகள் பறிக்கும் தொலைவில்
என் உள்ளம் இருந்தும்
யாரும் பறிக்காது, நீயும் பறிக்காமல்
அருகிலமர்ந்து கவனமாய் பார்த்துக் கொண்டாய்
மலர்ச்செடி என்றாவது தானாக
தலையில் மலரை சூடுமா?

தொலைவில் நின்று இவற்றை
வேடிக்கை பார்த்த பிரிவு கடைசியாக
வந்தேவிட்டது வாசற்படிக்கு
இப்படிக்கு என்று முடியும்
மடல் ஒன்று மீண்டும் நீண்டது
உன் கைவிரலினூடாக
நான் உனக்கு வேண்டாம்
என்று வேண்டி கேட்டுக் கொண்டாய்
மடல் தந்த பின் மீண்டும்
தோற்றுப்போனாய்


உன்னைப்போலவே உன் நீண்ட மடலும்
தோற்றுப்போனது நீ தந்த துண்டுச்சீட்டில்

" I Love U Da"என்று இரண்டு முறை
எழுதியிருந்தாய்

கைரேகை பார்க்க

கைரேகை பார்க்க

சென்ற தெருவோர

பாட்டிக்கு கடினமாக இருந்த்து

கணித்து சொல்ல.........

உன் கைரேகைகளோடு ஒட்டி போயிருந்த

என் கைவிரல் ரேகைகள் தொந்தரவு செய்தனவாம்..தேவதைகள் கூடுமிடம்

தேவதைகள் கூடுவதாகச் சொல்லி

கைபிடித்திழுத்து அழைத்துச் சென்றாள்.........

ஒரு முகமறியா தேவதை..........

கை அகற்றி, கைதட்டி சிரித்துவிட்டு வந்தேன்..

அவளுக்கென்ன தெரியும்,

நான் தினமும் உன்

ரகசிய தோட்டத்திற்கு வருவது......

சிரிப்பை வீசியா சேட்டை செய்வது

நண்பர்களோடு

நாம் கழிக்கும் பொழுதுகளில்......

நீ செய்யும் சேட்டைகளை

ரசிக்கும் என்னிடம்.........

உன் சிரிப்பை வீசி

சேட்டை செய்கிறது உன் அழகு......

ஆந்தைக்காதல்

நீ விலகியிருக்கும் பொழுதுகளிலெல்லாம்

எனக்கு கிட்டப்பார்வை..........

தொலைவில் நீ இருக்கும் பொழுதுகளில்

அருகில் இருக்கும் எதையும்

காண அனுமதிப்பதில்லை என் கண்கள்..........

நீ அருகில் வந்தால் எனக்கு

ஆந்தைகள் போல தூரப்பார்வை........

அருகிலிருக்கும் உன்னைத்தவிர

எதுவுமே தெரிவதில்லை........

செவிக்கு கேட்காத முத்த ஒலி

என் இதழ் பேசும் சொல்லை,

உன் செவி அறியாது,

உன் செவ்விதழ் மட்டும் கேட்கும் கலை.நான் இன்று ஒரு விடலை கவிஞன்!!!!

விழிமுடி இரவில்

உனக்கேஉனக்கான தோட்டத்தில்

நீ விதைக்கும் கனவுகளுக்கு

பெயர்தான் கவிதைகளோ!!!!!

நீ விதைத்த மலர் கொடி

லேசாய் என் உள்ளச்சுவர் தாண்டி

எட்டிப் பார்த்தால்தானோ என்னவோ

நான் இன்று ஒரு விடலை கவிஞன்!!!!

என் வெட்கங்களும், உன் வெட்கங்களும்

உன் ஓரப்பார்வையை சமாளிக்க

ஓராயிரம் திசை நோக்கி பயணிக்கின்றன,

என் முகத்தில் தோன்றும் வெட்கங்கள்............

அதனால்தானோ என்னவோ?

என் வெட்கங்களும்,

உன் வெட்கங்களும்

சந்தித்துக் கொண்டதேயில்லை

உன் வெட்கத்திடம் கொஞ்சம் சொல்லி வை.............

வெட்கத்திற்கு உன் இதழ்கள்

பிடிக்கும்தான், அதற்காக

நான் நெருங்கி வரும் வேளைகளிலெல்லாம்

உன் இதழ்களில் தொற்றிக் கொள்வது சரியில்லை.....

உன் வெட்கத்திடம் கொஞ்சம் சொல்லி வை.............கண்ணடிக்கிறது உன் விழிகள்


இப்படி பேசி,எழுதியே என்னை

ஈர்க்காதே என்று கண்டிக்கிறாய் நீ,

உனக்கு தெரியாமல்......

உன் விழிகள் கண்ணடிக்கிறது என்னை

அவள் சிரிப்பு

செலவு செய்ய முடியா

சில்லரைகளை கொட்டிச் சென்றவள்,

கைச்செலவுக்கு கவிதை தந்து சென்றாள்என் தேவ‌தையின் பிற‌ந்த‌நாள்என் தேவ‌தையின் பிற‌ந்த‌நாள்
தேவையான‌ வாலிப‌ வ‌தையை
த‌ர‌ ஒரு அழ‌கியாய் வ‌ள‌ர‌‌ பிற‌ந்த‌ நாள்........

காதும‌ட‌லோர‌ம் சிகை வீசி,
கைக‌ளிலிலே த‌ன் விர‌ல் பூசி,
பேச‌ எத்த‌னிக்கும் பொழுதுக‌ளிலெல்லாம்
என் இத‌ழ்க‌ளினோர‌ம் முத்த‌ தூசி எடுத்த‌வ‌ளின்
பிற‌ந்த‌நாள்.........

(ம்ம்.........தூய‌ த‌மிழ் பேசி நாட்க‌ள் ப‌ல‌ ஆகிவிட்ட‌ன‌.........)

என் இதழ் முத்த‌தூசி எடுப்ப‌வ‌ள்
குறித்து ஊசி அள‌வு த‌க‌வ‌ல்
கிடைத்தால் சொல்லுங்க‌ள்.......

க‌ழுத்துக்கு பாசிமாலையோடு,
வாழ்த்துச் சொல்ல‌
கையும், இத‌ழுமாய் காத்து கிட‌க்கிறான்
உன் காத‌ல‌ன் என்று.............

நாண அலை உன்னில் வீசும்

கவிதை சொல்லுவேன் மெல்ல
நம் கதைகள் மெல்லுவேன்
நாண அலை உன்னில் வீசும்
சொல்ல என் இதழே கூசும்

கதையின் தொடக்கத்திலே
என் முகம் உன்னிடமில்லை
என் வசம் உன் முகம் இல்லை
பதின் வயதை நீ கடக்க
எனை தொடர்ந்து வந்தாய்
முதல் முத்தமாய் முதல் பார்வை
என் இதழ் நகைக்க சிலநொடிகள் தந்தாய்
தயக்கத்தோடு அறிமுகமானோம்
கைகுலுக்ககூட தயங்கி நின்றோம்

தயக்கம் மறைந்து, மயக்கம் கலந்த
நட்பு தொற்றிக் கொண்டது
எனக்கே எனக்காய் தோட்டம் அமைத்து
நீ மட்டும் பூத்து கொண்டாய்
கண்பட்ட பின்பும், பட்டு போகாத
கைபடாத ரோசா என்றாய்......

நினைவுகளும் சிரிப்புமாய் வளர்ந்தது
நம் நட்பு, பிரிய போகிறோம்
என்றதும், நம் சிரிப்பை நாமே
பறிக்க தயங்கினோம்
முன்பு பறித்தோம், மீண்டும் சிரிப்போம்
என்ற நம்பிக்கையில்......

சொல்ல துணியா சொற்களை
சொல்லிவிட துணிந்து
மடல்கள் பரிமாறிக் கொண்டோம்
ஆனாலும், அரைகால் புள்ளியில்
மீதமிருந்தன சொல்ல தயங்கிய சொற்கள்

ஏதோ ஒரு தவிர்க்கமுடியாத
தவிப்பில், தவிர்க்காமல்
சொன்னேன் என் தவிப்பை.....
நீயோ ஏற்காமல் மறுக்கவில்லை...
ஏற்கவும் ஏனோ துணிவில்லை உனக்கு

உன் உள்ளத்தோடு பிறர் பேச
நீ உன் உள்ளத்தோடு
சில காலம் பேசுவதை தவிர்த்தாய்
முழுவதுமாய் புறக்கணிக்க முடியாமல்
உன் ஆறுதலுக்கு ஆறுதலாய்
என்னிடம் பேசி கடந்தாய்

உன் கைகள் பறிக்கும் தொலைவில்
என் உள்ளம் இருந்தும்
யாரும் பறிக்காது, நீயும் பறிக்காமல்
அருகிலமர்ந்து கவனமாய் பார்த்துக் கொண்டாய்
மலர்ச்செடி என்றாவது தானாக
தலையில் மலரை சூடுமா?

தொலைவில் நின்று இவற்றை
வேடிக்கை பார்த்த பிரிவு கடைசியாக
வந்தேவிட்டது வாசற்படிக்கு
இப்படிக்கு என்று முடியும்
மடல் ஒன்று மீண்டும் நீண்டது
உன் கைவிரலினூடாக
நான் உனக்கு வேண்டாம்
என்று வேண்டி கேட்டுக் கொண்டாய்
மடல் தந்த பின் மீண்டும்
தோற்றுப்போனாய்


உன்னைப்போலவே உன் நீண்ட மடலும்
தோற்றுப்போனது நீ தந்த துண்டுச்சீட்டில்

" I Love U Da"என்று இரண்டு முறை
எழுதியிருந்தாய்

கைரேகை பார்க்க

கைரேகை பார்க்க

சென்ற தெருவோர

பாட்டிக்கு கடினமாக இருந்த்து

கணித்து சொல்ல.........

உன் கைரேகைகளோடு ஒட்டி போயிருந்த

என் கைவிரல் ரேகைகள் தொந்தரவு செய்தனவாம்..தேவதைகள் கூடுமிடம்

தேவதைகள் கூடுவதாகச் சொல்லி

கைபிடித்திழுத்து அழைத்துச் சென்றாள்.........

ஒரு முகமறியா தேவதை..........

கை அகற்றி, கைதட்டி சிரித்துவிட்டு வந்தேன்..

அவளுக்கென்ன தெரியும்,

நான் தினமும் உன்

ரகசிய தோட்டத்திற்கு வருவது......

சிரிப்பை வீசியா சேட்டை செய்வது

நண்பர்களோடு

நாம் கழிக்கும் பொழுதுகளில்......

நீ செய்யும் சேட்டைகளை

ரசிக்கும் என்னிடம்.........

உன் சிரிப்பை வீசி

சேட்டை செய்கிறது உன் அழகு......

ஆந்தைக்காதல்

நீ விலகியிருக்கும் பொழுதுகளிலெல்லாம்

எனக்கு கிட்டப்பார்வை..........

தொலைவில் நீ இருக்கும் பொழுதுகளில்

அருகில் இருக்கும் எதையும்

காண அனுமதிப்பதில்லை என் கண்கள்..........

நீ அருகில் வந்தால் எனக்கு

ஆந்தைகள் போல தூரப்பார்வை........

அருகிலிருக்கும் உன்னைத்தவிர

எதுவுமே தெரிவதில்லை........

செவிக்கு கேட்காத முத்த ஒலி

என் இதழ் பேசும் சொல்லை,

உன் செவி அறியாது,

உன் செவ்விதழ் மட்டும் கேட்கும் கலை.நான் இன்று ஒரு விடலை கவிஞன்!!!!

விழிமுடி இரவில்

உனக்கேஉனக்கான தோட்டத்தில்

நீ விதைக்கும் கனவுகளுக்கு

பெயர்தான் கவிதைகளோ!!!!!

நீ விதைத்த மலர் கொடி

லேசாய் என் உள்ளச்சுவர் தாண்டி

எட்டிப் பார்த்தால்தானோ என்னவோ

நான் இன்று ஒரு விடலை கவிஞன்!!!!

என் வெட்கங்களும், உன் வெட்கங்களும்

உன் ஓரப்பார்வையை சமாளிக்க

ஓராயிரம் திசை நோக்கி பயணிக்கின்றன,

என் முகத்தில் தோன்றும் வெட்கங்கள்............

அதனால்தானோ என்னவோ?

என் வெட்கங்களும்,

உன் வெட்கங்களும்

சந்தித்துக் கொண்டதேயில்லை

உன் வெட்கத்திடம் கொஞ்சம் சொல்லி வை.............

வெட்கத்திற்கு உன் இதழ்கள்

பிடிக்கும்தான், அதற்காக

நான் நெருங்கி வரும் வேளைகளிலெல்லாம்

உன் இதழ்களில் தொற்றிக் கொள்வது சரியில்லை.....

உன் வெட்கத்திடம் கொஞ்சம் சொல்லி வை.............கண்ணடிக்கிறது உன் விழிகள்


இப்படி பேசி,எழுதியே என்னை

ஈர்க்காதே என்று கண்டிக்கிறாய் நீ,

உனக்கு தெரியாமல்......

உன் விழிகள் கண்ணடிக்கிறது என்னை

அவள் சிரிப்பு

செலவு செய்ய முடியா

சில்லரைகளை கொட்டிச் சென்றவள்,

கைச்செலவுக்கு கவிதை தந்து சென்றாள்