வெற்றிக்கு அருகில் இதழா? விரலா?ஒருவர் மற்றொருவருக்காக
வைத்திருக்கும் பொருட்களை பார்த்து…
நம் இதழ்கள் ஏளனமாக சிரித்து கொள்கிறது………
வெற்றிக்கு அருகில் இதழா? விரலா?

காய்ச்சல் எனக்கா உனக்கா?நம் பொது நண்பர்-மருத்துவர் கிண்டலுக்கு
சொன்னாலும் சொன்னார்..
எனக்கு காதல் காய்ச்சலென்று...
ஒரு மாத்திரை விடாமல்,
“I love you”என்று எழுதி நீட்டுகிறாயே...
காய்ச்சல் எனக்கா உனக்கா?

நான் மடல் எழுதும் பக்கங்களில்எனக்கு முன்னே சில நேரங்களில்
நான் மடல் எழுதும் பக்கங்களில்
உன் பிரிவின் வலியை பதிந்துவிடுகிறது..
மலர்க்காம்பு..........

உன் கவனம் ரோஜாவால் தடைபட்டால்மஞ்சள் ரோஜாவை சில நேரங்களில்
தண்ணீரில் வீசியெறிகிறது செடி,
வண்ணம் கரைந்துவிட வேண்டுமென்று..
பின் என்ன? உன் கவனம் ரோஜாவால் தடைபட்டால்
செடிக்கு சினம் வராதா என்ன?

கிளிகள் கண்ணாடி பார்த்து பேசுமா?கிளிகள் கண்ணாடி பார்த்து பேசுமா?
என்ற சந்தேகம் எனக்கிருந்தது..
நீ ஒப்பனை செய்யும் கண்ணாடிமுன்
நிற்கும் வரை

என் தலையணை சுவாசிக்கும் காற்று..நீ உன் தலையணைக்குள்
ஒழித்து வைத்திருக்கும் கனவுகள்தான்
என் தலையணை சுவாசிக்கும் காற்று..

உயிரற்ற பரிசை, உயிருள்ளது முந்திக் கொள்கிறதுபரிசுகளோடு துள்ளி ஓடிவரும்
என் செல்லக்குட்டி நீ, உனையறியாமலேயே
எனை அணைத்துக் கொள்கிறாய்
உயிரற்ற பரிசை, உயிருள்ளது முந்திக் கொள்கிறது

ம், ம்ஹும், ஆமாம், இல்லைம், ம்ஹும், ஆமாம், இல்லை
இந்த நான்கு சொற்களை கொண்டு
உரையாடலின் சுவை கூடிட முடியுமா?
முடியும்..உங்கள் காதலியின் பெற்றோர்
அவளின் அருகே இருக்கும் பொழுது
அவளின் கைப்பேசிக்கு ஒருமுறை
அழைத்து பாருங்கள்