சூட்டில் மை காய்ந்துவிடாதா?பேனா முனையை....
இதழில் வைத்து சிந்தித்தால்
பேனாவுக்கு எப்படிங்க எழுத வரும்....
சூட்டில் மை காய்ந்துவிடாதா?

பேனாவை என்னிடம் தந்துவிட்டு
என்னைத்தவிர மற்றதை பார்
கவிதைகள் தானாய் வரும்..

இல்லையென்றால் என்னாலும்
கவிதைஎழுத முடியாது...
இதழ் கிறுக்கலைத்தான்
படிக்கத்தான் முடியும்...

வெற்றுத்தாளின் பின்னால்தான் ஒழிந்து கொண்டிருக்கிறதுஎன் பெயரை மட்டும் எழுதி
நீ நீட்டிய வெற்றுத்தாளின்
பின்னால்தான் ஒழிந்து கொண்டிருக்கிறது
நான் தேடிக்கொண்டிருக்கும்
ஓராயிரம் கவிதைகள்

நீயே வரைந்து கொள்ளும் நிழல்எல்லோருக்கு சூரியன் வரையும் நிழலை
உனக்கு மட்டும் நீயே வரைந்து கொள்வாயோ?கடலில் குளிக்க செல்லும் முன்
உன் நிழலை கரையிலேயே விட்டுச்செல்
தாகத்தில் உன் நிழலை
கடல் குடித்து விடப்போகிறது

என் வீட்டிற்கு வழி தெரியவில்லைஎன் வீட்டிற்கு வழி தெரியவில்லை
உன் காலடி தடமெங்கே?
என் கண்ணாடிக்குள் உருவம் தெரியவில்லை
உன் நிழலெங்கே?
என் காதுகளுக்கு குரல் கேட்கவில்லை
உன் அழைப்புகளெங்கே?